ஒண்ணும் பண்ண முடியாது... பர்மிஷன் வாங்கி தான் பண்ணோம்… பாகிஸ்தானின் மூக்கை உடைத்த பிசிசிஐ
டெல்லி:ஐசிசியின் அனுமதியுடன் தான் ராஞ்சி ஒருநாள் போட்டியில் வீரர்களுக்கு ராணுவ தொப்பி வழங்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியினர் ராணுவ வீரர்கள் அணியும் தொப்பி அணிந்து விளையாடினார். ஆட்டத்தில் கிடைக்கும் ஊதியத்தை வீரர்களின் குடும்பத்துக்கு வழங்கவும் கோலி தலைமையிலான அணியினர் முடிவு செய்திருந்தனர்.
உணர்வுப்பூர்வமாக செயல்பட்ட இந்திய அணி வீரர்களின் நடவடிக்கையை பாகிஸ்தானால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்திய அணி மீது ஐசிசி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

பாக். குற்றச்சாட்டு
பாகிஸ்தான் வெளியுறவத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரோஷி, இந்திய கிரிக்கெட் தங்களின் அணிக்குரிய தொப்பியை அணிந்து விளையாடுவதற்கு பதிலாக இந்திய ராணுவத்தின் தொப்பி அணிந்து விளையாடியதை இந்த உலகமே பார்த்தது. ஆனால் ஐசிசி பார்க்கவில்லையா?

நடவடிக்கை வேண்டும்
இந்த விஷயத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளிக்கும் முன், ஐசிசி கவனிக்க வேண்டும். இந்திய அணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது ஐசிசியின் பொறுப்பாகும் என்று கூறி இருந்தார்.

சாதாரணமாக விடக்கூடாது
பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பவாத் சவுத்ரி, இந்திய அணியின் செயல் சாதாரணமானது அல்ல. இது கிரிக்கெட்தானே என்று விட்டுவிட முடியாது. இதுபோன்ற செயல்களை இந்திய அணி நிறுத்தி கொள்ள வேண்டும்.

கறுப்பு பட்டை அணிவோம்
அப்படி செய்யாவிட்டால், உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி கையில் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும். காஷ்மீரில் இந்திய ராணுவம் செய்யும் அட்டூழியத்தை கண்டித்தும், உலகின் பார்வையை திருப்பும் வகையிலும் கறுப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும் என்று கூறியிருந்தார்.

பிசிசிஐ விளக்கம்
இந் நிலையில் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்திய அணி தற்போது பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்துபிசிசிஐ விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அனுமதி பெறப்பட்டது
ராணுவ தொப்பி அணிந்து விளையாடுவது குறித்து... ஐசிசி முதன்மை செயல் அதிகாரி டேவ் ரிச்சட்சனிடம் முறைப்படி அனுமதி வாங்கப்பட்டது. சிட்னியில் பிங்க் டெஸ்ட் நடைபெற்றதை முன் உதாரணமாக வைத்து அந்த அனுமதி வாங்கப்பட்டதாக கூறியிருக்கிறது.


Click it and Unblock the Notifications