Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாஸ்திரி சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடி வாங்கிய இந்தியா!

மும்பை: அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள், கவனமாக இருக்க வேண்டும் என்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி குறித்து ஏற்கனவே டைரக்டர் ரவி சாஸ்திரி எச்சரித்திருந்தார். ஆனாலும் இந்திய பந்து வீச்சாளர்கள் சற்றும் மனதை அப்ளை பண்ணாமல் தான் தோன்றித்தனமாக பந்து வீசியது, சொதப்பல் பீல்டிங் என இந்தியா தனது பேட்டிங் மூலம் சேர்த்த பலத்தை சுலபமாக கை நழுவ விட்டு விட்டது.

அதை விட முக்கியமாக கெய்லை மட்டுமே முக்கியமாக குறி வைத்து அவர்கள் விளையாடியதுதான் மிகப் பெரிய தவறாகப் போய் விட்டது. கெய்ல் மட்டுமல்லாமல் அந்த அணியில் உள்ள பிற புயல்கள் குறித்து அவர்கள் கவலைப்படாமல் விட்டு விட்டார்கள்.

இத்தனைக்கும் நேற்று ஆடிய லென்டில் சிம்மன்ஸ் கூட, பிளட்சருக்குப் பதில் அணியில் சேர்க்கப்பட்டு களம் இறங்கியவர்தான். இந்தியாவின் பந்து வீச்சை ஜாலியாக சிரித்தபடி அவர் நொறுக்கித் தள்ளியதைப் பார்த்தபோது கோஹ்லியின் உழைப்பு நம் கண் முன்னாலேயே் உதிர்ந்து நொறுங்கியதை நம்மால் வேதனையுடன் உணர முடிந்தது.

அருமையான பவுலிங்

அருமையான பவுலிங்

உண்மையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று தனது ஆல் ரவுண்ட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணி நிச்சயம் நேற்று 220 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும். ஆனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு ரன் வேகத்தை சற்று மட்டுப்படுத்தி 200 ரன்களுக்குள் நம்மை நிறுத்தி விட்டனர்.

சிறப்பான சேஸிங்

சிறப்பான சேஸிங்

அதன் பின்னர் 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை மிக அழகாக சேஸ் செய்ய ஆரம்பித்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. கெய்ல், துரிதமாக அவுட்டாகிச் சென்றாலும் கூட லென்டில் சிம்மன்ஸ், சார்லஸ், ரஸ்ஸல் ஆகியோர் அபாரமாக நிலைத்து நின்று ஆடினர்.

சிலிர்க்க வைத்த சிம்மன்ஸ்

சிலிர்க்க வைத்த சிம்மன்ஸ்

குறிப்பாக சிம்மன்ஸ் மிகச் சிறப்பாக ஆடினார். இந்தியப் பந்து வீச்சு அவரை எந்த வகையிலும் பயமுறுத்தவில்லை. மிக மிக அனாயசமாக ஆடினார். அட்டகாசமாக ஆடினார். கோஹ்லியை மிஞ்சி விட்டார் என்று கூடச் சொல்லலாம்.

அன்றே எச்சரித்தார் சாஸ்திரி

அன்றே எச்சரித்தார் சாஸ்திரி

மேற்கு இந்தியத் தீவுகள் அணி குறித்து அன்றே எச்சரித்திருந்தார் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில் கெய்ல் மட்டுமல்ல, அவர்களிடம் நிறைய அதிரடி வீரர்கள் உள்ளனர். நிறைய போட்டியை வென்று கொடுக்கக் கூடிய வீரர்கள் உள்ளனர். நாம் உஷாரமாக இருக்க வேண்டும். அவர்கள் அபாயகரமானவர்கள் என்று சாஸ்திரி கூறியிருந்தார்.

நாம்தான் சுதாரிக்கத் தவறி விட்டோம்.

Story first published: Friday, April 1, 2016, 11:32 [IST]
Other articles published on Apr 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+