வேலையை காட்டிய ராகுல், கோலி.. வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா திணறல்.. நம்ம ஆளுங்களுக்கு என்ன ஆச்சு?
சட்டோகிராம் : வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை வங்கதேச அணி ஒரு முறை கூட இந்தியாவை வீழ்த்தியது இல்லை.
சட்டோகிராம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில், இங்கு கடந்த 5 டெஸ்ட் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்களே ஆதிக்கம் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராக ராகுல், சுப்மான் கில் களமிறங்கினார்.

சுழற்பந்துவீச்சு
பந்து போதிய அளவில் பவுன்ஸ் ஆக வில்லை. இதன் காரணமாக வேகப்பந்துவீச்சாளர்கள் எவ்வித தாக்கத்தையும், நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. இந்திய தொடக்க ஜோடி, சுலபமாக ரன்களை சேர்த்து வந்தது. இதனால் வெறும் 6 ஓவர்கள் முடிந்த நிலையில், வங்கதேச கேப்டன் ஷகிபுல் ஹசன் சுழற்பந்துவீச்சை பயன்படுத்தினார்.

தேவையில்லாத ஷாட்
இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் சற்று தடுமாறினர். நன்றாக விளையாடி கொண்டிருந்த சுப்மான் கில், தைஜூல் இஸ்லாம் பந்தில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார். இதன் காரணமாக வங்கதேச அணி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இதே போன்று கேஎல் ராகுலும் நிதானமாக விளையாடினார்.

விராட் கோலி ஏமாற்றம்
அப்போது 22 ரன்கள் எத்த நிலையில் காலித் பந்தை அடிக்க முயன்று, அது ஸ்டம்பில் இன்சைட் எட்ஜ் ஆகி ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலியிடம் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால் தைஜூல் இஸ்லாமின் பந்தில் விராட் கோலி ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

ரிஷப் பண்ட் பதிலடி
இதனால் 41 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த நிலையில், 48 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி தனது வழக்கமான அட்டாகிங் கிரிக்கெட்டை வெளிப்படுத்தி, வங்கதேசத்திற்கு நெருக்கடி அளித்தார். முதல் நாள் மதிய நேர உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டு இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications