உலக டெஸ்ட் தரவரிசை... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... ரெண்டுலயும் இந்தியாதான் டாப்பு!
அகமதாபாத் :இந்தியா -இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.
Recommended Video

இதையடுத்து உலக டெஸ்ட் தரவரிசையில் 122 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது இந்திய அணி.
இதேபோல உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 520 புள்ளிகளை பெற்று நியூசிலாந்தை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

தொடர் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்துள்ளது. இதில் 3க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. ஜூன் மாதத்தில் நியூசிலாந்துடன் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

முதலிடத்தை பிடித்த இந்தியா
இந்நிலையில் உலக டெஸ்ட் தரவரிசையில் 122 புள்ளிகளுடன் முதலிடத்தை இந்தியா பெற்றுள்ளது. இந்தியாவை தொடர்ந்து 118 புள்ளிகளுடன் நியூசிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரை அபாரமான புள்ளிகளுடன் இந்தியா வெற்றி கொண்டுள்ளதையடுத்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

12 போட்டிகளில் வெற்றி
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் 72.2 சதவிகித புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. இதுவரை ஆடியுள்ள 6 தொடர்களில் 12 போட்டிகளில் வெற்றியும் ஒன்றில் டிராவும் மற்றும் 4 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. இதில் 3 தொடர்கள் இந்தியாவிலும் 3 வெளிநாட்டிலும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3வது இடத்தில் ஆஸ்திரேலியா
இந்நிலையில் 70 சதவிகித புள்ளிகளுடன் 420 புள்ளிகளை பெற்று நியூசிலாந்து இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 69.2 சதவிகித புள்ளிகளுடன் 3வது இடத்திலும் 61.4 புள்ளிகளை பெற்று இங்கிலாந்து அணி 4வது இடத்திலும் உள்ளது.


Click it and Unblock the Notifications