Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலியாவை 3வது இடத்திற்கு தள்ளி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடம்.. இந்தியா அதிரடி

பிரிஸ்பேன் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான டெஸ்ட் தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி கொண்டுள்ளது.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையில் சொற்ப புள்ளிகளே வித்தியாசம் காணப்படுவதால் வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லும் பட்சத்தில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும்.

இந்தியா முதலிடம்

இந்தியா முதலிடம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 4வது மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ளது. இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

71.7 வெற்றி சதவிகிதம்

71.7 வெற்றி சதவிகிதம்

இந்திய அணி 430 புள்ளிகளுடன் 71.7 வெற்றி சதவிகிதத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் பட்டியலில் முதலிடத்திற்கு தாவியுள்ளது. இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா தற்போது இந்தியாவுடனான தோல்வியை அடுத்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 332 புள்ளிகளுடன் 69.2 வெற்றி சதவிகிதத்தை பெற்றுள்ளது.

420 புள்ளிகள்

420 புள்ளிகள்

கடந்த மேற்கிந்திய தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்த பட்டியலில் முன்னேற்றமடைந்திருந்த நியூசிலாந்து தற்போது 420 புள்ளிகளுடன் 70 வெற்றி சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மூன்று அணிகளுக்கிடையிலும் குறைந்த அளவிலான புள்ளிகளே வித்தியாசம் காணப்படுகிறது.

வெற்றி பெற வேண்டிய கட்டாயம்

வெற்றி பெற வேண்டிய கட்டாயம்

இந்நிலையில் அடுத்ததாக இந்தியாவில் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முழுமையான வெற்றியை இந்திய அணி பெறும் பட்சத்தில் வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறும்.

Story first published: Tuesday, January 19, 2021, 17:30 [IST]
Other articles published on Jan 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+