Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசியாவில் இந்தியா தான் கிங்.. கிரிக்கெட்டில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் எதிரான 6 ஆண்டு ரெக்கார்ட்

மும்பை: ஆசிய கண்டத்தில் இந்திய அணி கிரிக்கெட்டில் தொடர்ந்து நம்பர் ஒன் அணி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறது. டெஸ்ட்,டி20 மற்றும் ஒரு நாள் போட்டியில் ஆசிய கிரிக்கெட்டில் எப்போதுமே இந்திய அணி தான் மூன்று வகை கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்திய அணி 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் 2024 மற்றும் 2026 டி20 உலக கோப்பையை வென்று இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையையும் இந்திய அணியே கைப்பற்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியாவை வீழ்த்துவது மிகவும் கடினமாக மாறி இருந்தது.

India

இதன் காரணமாக தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இரண்டு சைக்கிளிலும் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை சென்றது. இந்தியாவைத் தவிர எந்த ஒரு ஆசிய அணியும் இதுவரை இறுதிப் போட்டிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பொறுத்தவரை வெல்லவில்லை. ஆசிய கோப்பை பொறுத்தவரை 2022 ஆம் ஆண்டு டி20 போட்டியாக நடத்தப்பட்ட போது இலங்கை கோப்பையை வென்றது.

அதன் பிறகு டி20 மற்றும் ஒரு நாள் என இரண்டு வகை ஆசிய கோப்பையிலும் இந்தியாவை வென்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானை நாம் வதம் செய்திருக்கின்றோம். இதுவரை 17 போட்டிகளில் இந்தியா 14 போட்டிகளில் வென்று இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற ஆசிய கோப்பை டி20 தொடர்களும் இந்திய அணி மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் 17க்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த ஆறு ஆண்டுகளில் இலங்கைக்கு எதிரான அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியாவே வென்று இருக்கிறது. இதேபோன்று ஆப்கானிஸ்தானின் பொருத்தவரை இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் கூட அவர்களிடம் வீழவில்லை. பாகிஸ்தானை பொருத்தவரை கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய அணி 2 டி20 மட்டும் தான் வீழ்ந்திருக்கிறது. மற்ற 7 போட்டிலும் இந்தியாவே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த ஆறு ஆண்டுகளில் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்றுள்ளது. இலங்கையை பொறுத்தவரை இந்தியாவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் இந்த ஆறு ஆண்டுகளில் நடந்திருக்கிறது. இந்த மூன்றிலுமே இந்தியா வென்றுள்ளது. இந்த ஆறு ஆண்டுகளில் 11 ஒரு நாள் போட்டிகள் நடந்திருக்கிறது இதில் இந்தியா எட்டு முறையும் இலங்கை 2 முறையும் ஒரு போட்டி சமனிலும் முடிந்திருக்கிறது.

டி20 கிரிக்கெட் பொறுத்த வரை இந்தியா 12 வெற்றிகளை பெற்றிருக்கிறது. இலங்கை 4 ஆட்டத்தில் தான் வென்றுள்ளது. இப்படி இந்திய அணி ஆசிய கிரிக்கெட்டில் கிங்காக வலம் வருவது தான் நமது அண்டை நாடுகள் அணி ரசிகர்களுக்கு புகைச்சலை கிளப்புகிறது

Story first published: Thursday, August 20, 2026, 6:30 [IST]
Other articles published on Aug 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+