For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

லபக் கேட்ச் முதல் நச் பேட்டிங் வரை.. இந்தியா-ஆஸி. தொடரின் புல்லரிக்க வைக்கும் புகைப்படங்கள்

By Veera Kumar

சிட்னி: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடிவருகிறது.

முதல் 3 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மூன்றிலுமே ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

இப்போட்டித் தொடரில் தொடர்ச்சியாக பேட்டிங் ஆதிக்கம் செலுத்திவருகிறது. ரோகித் ஷர்மா, கோஹ்லி போன்றோர் சதம் அடித்துள்ளனர். இத்தொடரின் ஹிட் காட்சிகள் ஒரு பார்வை:

கேப்டன் நாக்

கேப்டன் நாக்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனது முதல் ஆட்டத்தில் சதம் விளாசி, இந்தியாவை எளிதாக தோற்கடிக்க உதவினார். ஆஸி. கேப்டன் விளாசிய ஒரு அருமையான ஷாட்டின் ஐ-விட்னசாக காட்சியளிக்கிறார் இந்திய கேப்டன் டோணி.

மின்னல் வேகம்

மின்னல் வேகம்

ஆபத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஆஸ்திரேலியாவின், ஜார்ஜ் பெய்லி விக்கெட்டை மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் தூக்கிய டோணி. 3வது ஒருநாள் போட்டியில் முக்கியமான கட்டத்தில் இந்த விக்கெட் வீழ்த்தப்பட்டது.

வச்சி செஞ்ச மேக்ஸ்வெல்

வச்சி செஞ்ச மேக்ஸ்வெல்

3வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் கை ஓங்கியிருந்த நிலையில் களமிறங்கி ஆஸி. பேட்ஸ்மேன், கிளன் மேக்ஸ்வெல், அபாரமாக ஆடி 96 ரன்கள் குவித்து அந்த அணியை வெற்றிபெறச் செய்தார். மேக்ஸ்வெல் பேட்டின் சரியான இடத்தில் பந்து பட்டு எகிறும் காட்சி இது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

மூன்றாவது ஒருநாள் போட்டியில், சதம் அடித்த மகிழ்ச்சியில், இந்திய டெஸ்ட் அணி கேப்டந் விராட் கோஹ்லி, ரசிகர்களை நோக்கி பேட்டை தூக்கி காண்பிக்கிறார்.

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட்

இந்திய கேப்டன் டோணியின் அதிவேக ஷாட் திறமை மழுங்கவில்லை என்பது ஆஸி. தொடரில் அவ்வப்போது வெளிப்படுகிறது. அந்த வகையில், கைகளை முறுக்கி, பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட டோணியின் இந்த ஷாட் ஒரு உதாரணம்.

லேட் கட்

லேட் கட்

விராட் கோஹ்லியின் ஸ்பெஷல் ஆட்டத்தில் ஒன்றான லேட்-கட் ஷாட்டை அடித்து பந்தை விரட்டும் காட்சி.

ஹேவ் ஏ பிரேக்

ஹேவ் ஏ பிரேக்

பேட்டிங்கிற்கு நடுவே, பானம் குடித்து தாகத்தை தணித்துக்கொண்ட விராட் கோஹ்லி மற்றும் அஜிங்ய ரஹானே.

எகிறும் ரோகித்

எகிறும் ரோகித்

நூறு ரன்கள் அடித்த மகிழ்ச்சியில் நூறு அடி உயரத்திற்கு எம்பி குதிக்கும் முயற்சியில் ரோகித் ஷர்மா.

லபக் கேட்ச்

லபக் கேட்ச்

இஷாந்த் ஷர்மா பந்தில் ஷான் மார்ஷ் தூக்கியடித்த பந்து கோஹ்லியை நோக்கி வர, அதை அவர் அபேசாக லபக் செய்த கேமரா கிளிக் இது.

Story first published: Monday, January 18, 2016, 16:54 [IST]
Other articles published on Jan 18, 2016
English summary
India will tour Australia in January 2016 to play 5 One Day Internationals and 3 Twenty20 Internationals. These are the best photos of the series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+