Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

5 ஒன்டே, 3 டி20.. சிங்கத்தை குகையிலேயே சந்திக்க ஆஸ்திரேலியா போகிறது இந்திய அணி!

மெல்போர்ன்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், ஆஸ்திரேலியாவில், இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. அதற்கான கால அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

உலக கோப்பைக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில், இந்தியா சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடர் மற்றும், முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியது.

ஜனவரியில் சுற்றுப் பயணம்

ஜனவரியில் சுற்றுப் பயணம்

இந்நிலையில், வரும் ஜனவரி மாதத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் செய்ய உள்ளது. இதை உறுதிபடுத்தியுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அதற்கான போட்டி அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய செயல் மேலாண் இயக்குநர், மைக் மெக்கென்னா கூறுகையில், ஆஸ்திரேலியா-இந்தியா மோதிய உலக கோப்பை அரையிறுதி போட்டியை, இந்தியாவில் 30 கோடி பேர் தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்து ரசித்துள்ளனர். எனவே, இரு நாடுகளுக்கும் நடுவே கூடுதலாக கிரிக்கெட் தொடர்களை நடத்துவற்கு முடிவு செய்தோம் என்றார்.

ஒருநாள் போட்டி அட்டவணை

ஒருநாள் போட்டி அட்டவணை

ஜனவரி 12: முதல் ஒருநாள் போட்டி- பெர்த். ஜனவரி 15: 2வது ஒருநாள் போட்டி - பிரிஸ்பேன். ஜனவரி 17: 3வது ஒருநாள் போட்டி - மெல்போர்ன். ஜனவரி 20: 4வது ஒருநாள் போட்டி- கான்பெர்ரா. ஜனவரி 23: 5வது ஒருநாள் போட்டி- சிட்னி.

டி20 போட்டி அட்டவணை

டி20 போட்டி அட்டவணை

ஜனவரி 20: முதல் டி20 போட்டி- அடிலெய்டு. ஜனவரி 29: 2வது டி20 போடடி- மெல்போர்ன். ஜனவரி 31: 3-வது டி20 போட்டி- சிட்னி.

Story first published: Thursday, July 9, 2015, 13:13 [IST]
Other articles published on Jul 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+