Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

7 ஆண்டுக்கு பிறகு வங்கதேசம் செல்லும் இந்திய அணி.. அட்டவணையை வெளியிட்டது வங்கதேசம்.. 2 டெஸ்ட், 3 ODI

டாக்கா : வங்கதேசத்துக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி இரண்டு டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.

ஐசிசி t20 உலக கோப்பை போட்டி நவம்பர் 13ஆம் தேதி முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 18ஆம் தேதி இந்திய அணி நியூசிலாந்து செல்கிறது.

அங்கு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இந்த தொடர் நவம்பர் 30ஆம் தேதி முடிவடைகிறது.

எப்போது தொடக்கம்

எப்போது தொடக்கம்

இந்த நிலையில் நியூசிலாந்தில் இருந்து இந்திய அணி நேரடியாக வங்கதேசம் வந்தடைகிறது. வங்கதேசத்தில் டிசம்பர் நான்காம் தேதி தொடங்கும். இந்த தொடர் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மூன்று ஒரு நாள் போட்டி முதலில் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

ஒருநாள் அட்டவணை

ஒருநாள் அட்டவணை

அதன்படி டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒருநாள் போட்டியும், டிசம்பர் 7ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், டிசம்பர் 10ஆம் தேதி மூன்றாவது ஒரு நாள் போட்டியும் நடைபெறுகிறது. இந்த போட்டி அனைத்தும் டாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரெண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

டெஸ்ட் அட்டவணை

டெஸ்ட் அட்டவணை

இதில் இரண்டிலும் இந்தியா வெற்றி பெற்றால் மட்டுமே ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு பிரகாசமாகும்.டிசம்பர் 14ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி சாட்டோகிராமிலும் டிசம்பர் 22ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்திய அணியை மனதார வரவேற்பதாக வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நாஸ்முல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

7 ஆண்டுகள்

7 ஆண்டுகள்

இந்தியா வங்கதேசம் மோதும் ஆட்டம் எப்போதும் பரபரப்பு நிறைந்ததாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் .இரு அணிகளும் மறக்க முடியாத பல ஆட்டங்களை விளையாடி இருப்பதாக குறிப்பிட்டுள்ள நாஸ்முல் ஹாசன், வங்கதேசத்துக்கு இந்திய அணி அனுப்பியுள்ளதற்கு பி சி சி ஐக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தொடரை நடத்தும் வங்கதேசத்துக்கு என் பாராட்டை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

சீனியர்களுக்கு ஓய்வு

சீனியர்களுக்கு ஓய்வு

வங்கதேசத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் அமையும் என ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் வங்கதேசத்துக்கு எதிரான இந்த இரண்டு டெஸ்ட்டும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, October 21, 2022, 13:50 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+