Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோலி முடிஞ்சிது.. 2 முக்கிய வங்கதேச வீரர்களுக்கு காயம்.. இந்தியாவுக்கு இப்படி ஒரு லக்?

மிர்பூர் : இந்திய வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் நான்காம் தேதி மிர்பூர் நகரில் தொடங்குகிறது.

அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் இந்திய அணியை தயார் செய்யும் விதமாக முற்றிலும் பலமான வீரர்களைக் கொண்ட அணியை பிசிசிஐ வங்கதேசத்திற்கு அனுப்பியுள்ளது.

நியூசிலாந்து தொடரில் இடம் பெறாத விராட் கோலி ,கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.

முதல் தொடர்

முதல் தொடர்

டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பிறகு முதன்முறையாக சீனியர் வீரர்கள் விளையாடும் தொடர் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய அணியை விட பலம் குன்றி காணப்படும் வங்கதேசத்திற்கு எதிராக ஸ்டார் வீரர்களை அனுப்பியது ஏன் என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

9 விக்கெட்டுகள்

9 விக்கெட்டுகள்

இந்த நிலையில் வங்கதேசத்துக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டஸ்கின் அகமத் காயம் காரணமாக ஒரு நாள் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகு வலி ஏற்பட்டு இருப்பதால் அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். டஸ்கின் அகமது கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

சந்தேகம்

சந்தேகம்

இதனால் இந்திய அணிக்கு எதிராக டஸ்கின் அகமது பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று வங்கதேச அணியின் கேப்டன் தமீம் இக்பால் காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் பங்கேற்பது சந்தேகமாக உள்ளதாக வங்கதேச தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

 கேப்டன் காயம்

கேப்டன் காயம்

தற்போது டஸ்கின் அகமதுக்கு மாற்றுவீராக சொரிபுல் இஸ்லாம் சேர்க்கப்பட்டுள்ளார். முக்கிய வீரர்கள் இல்லாததால் லிட்டன் தாஸ் , ஷகிபுல் ஹசன், முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும். முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் நான்காம் தேதியும், இரண்டாவது போட்டி 7ஆம் தேதியும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி வரும் பத்தாம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, December 1, 2022, 17:33 [IST]
Other articles published on Dec 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+