
அயர்லாந்து தொடர்
அங்கு வரும் ஜூன் 26ஆம் தேதி முதல் டி20 போட்டியிலும், 28ஆம் தேதி 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. அதன் பின் நேரடியாக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி ஜூலை 1ஆம் தேதி, அங்கு கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட எஞ்சிய 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி பிர்மிங்காமில் நடைபெறுகிறது.

டி20 தொடர்
இந்தப் போட்டியை இந்தியா டிரா செய்தாலே தொடரை வென்றுவிடும். டி20 போட்டிக்கு தயாராகும் வகையில், ஒன்றாம் மற்றும் மூன்றாம் தேதியில் 2 டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7ஆம் தேதி சௌதாம்டன் நகரில் முதல் டி20 போட்டியும், 9ஆம் தேதி பிர்மிங்காமில் 2வது டி20 போட்டியும், 10ஆம் தேதி நாட்டிங்காமில் 3வது டி20 போட்டியும் நடைபெறுகிறது.

ஒருநாள் தொடர்
இதனைத் தொடர்ந்து ஜூலை 12ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டியும், 14ஆம் தேதி 2வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் மைதானத்திலும், வரும் 17ஆம் தேதி மான்செஸ்டர் மைதானத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடர், ஆசிய கோப்பை என தொடர்ந்து இந்திய அணி போட்டிகளில் விளையாட உள்ளது.

2 அணிகள்
கடந்த ஆண்டு இலங்கை தொடருக்கு ஒரு அணியும், இங்கிலாந்து தொடருக்கு ஒரு அணியும் என 2 அணிகளை இந்திய அணி தேர்வு செய்தது. அதே போல் இம்முறை அயர்லாந்து தொடருக்கு ஒரு அணியை தேர்வு செய்யும் இந்திய அணி,சீனியர்கள் அடங்கிய டெஸ்ட் அணியை இங்கிலாந்துக்கு அனுப்பும்.


Click it and Unblock the Notifications











