For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அணியில் இடம்வேண்டும் என்றால் அதை செய்யுங்கள்” வீரர்களுக்கு உத்தரவு போட்ட டிராவிட்.. அதிரடி முடிவு!

மும்பை: இந்திய அணியில் வீரர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் ராகுல் டிராவிட் கடுமையான விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்.

Recommended Video

BCCI vs Dravid இடையே கருத்து வேறுபாடு? அணித்தேர்வில் குழப்பம்| Oneindia Tamil

இந்திய அணி இம்மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது.

இந்த தொடருக்கான அணித்தேர்வு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனில் கும்ப்ளேவின் விதிமுறைகளை மீண்டும் டிராவிட் கொண்டு வந்துள்ளார்.

“அந்த ஒரே தவறு தொடர்ந்து நடக்கிறது” ​இந்திய அணியில் உள்ள முக்கிய குறைபாடு.. எடுத்துக்கூறிய லக்‌ஷ்மண்“அந்த ஒரே தவறு தொடர்ந்து நடக்கிறது” ​இந்திய அணியில் உள்ள முக்கிய குறைபாடு.. எடுத்துக்கூறிய லக்‌ஷ்மண்

இந்திய அணி தேர்வு

இந்திய அணி தேர்வு

இந்திய அணியில் தற்போது இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதால், சீனியர்களுக்கான இடங்கள் பறிபோகும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதில் குறிப்பாக ரகானே, சட்டீஸ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா உள்ளிட்ட வீரர்களின் டெஸ்ட் எதிர்காலம் ஏற்கனவே கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு முடிவுகட்ட ராகுல் டிராவிட் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

புது விதிமுறை

புது விதிமுறை

அதாவது இனி காயத்தினாலோ, ஃபார்ம் அவுட்டாகியோ இந்திய அணியை விட்டு வெளியேறும் வீரர்கள், "விஜய் ஹசாரே, ராஞ்சி கோப்பை" போன்ற உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்துவிட்ட பின்னர் தான் இந்திய அணி தேர்வுக்கு வர முடியும் என டிராவிட் முடிவெடுத்துள்ளார்.

கும்ப்ளேவின் திட்டம்

கும்ப்ளேவின் திட்டம்

இதற்கு முன்னர் இந்த திட்டத்தை, அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக இருந்த போது அறிமுகப்படுத்தினார். பின்னர் ரவி சாஸ்திரியின் பதவி காலத்தின் போது கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் அதே திட்டத்தை ராகுல் டிராவிட் கையில் எடுத்துள்ளார்.

முக்கிய காரணம் யார்?

முக்கிய காரணம் யார்?

இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஹர்திக் பாண்ட்யா. காயத்தால் அணியில் இருந்து வெளியேறிய பாண்ட்யா, மீண்டும் அணிக்குள் கொண்டு வரப்பட்டார். தற்போது மீண்டும் அவரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என அழுத்தங்கள் வருவதாக தெரிகிறது. இதற்காக தான் அனைவருக்கும் பொதுவானதாக புதிய திட்டத்தை டிராவிட் கொண்டு வந்துள்ளார்.

Story first published: Wednesday, December 8, 2021, 23:00 [IST]
Other articles published on Dec 8, 2021
English summary
Head coach Rahul Dravid implemented the new policy for the team selection
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X