Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கெஞ்சும் தென்னாப்பிரிக்கா.. நழுவும் பி.சி.சி.ஐ. ?? என்ன நடக்கிறது??

மும்பை; தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டி கொண்ட தொடரில் வரும் 17ஆம் தேதி முதல் பங்கேற்கிறது.

Recommended Video

தொடரை ஒத்திவைக்க முடிவெடுத்த BCCI.. கோரிக்கை வைக்கும் South Africa

இதற்காக வரும் 8ஆம் தேதியே இந்திய அணி, மும்பையிலிருந்து தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓம்மைக்கரான் வகை கொரோனா வைரஸ், உலகையே மீண்டும் அச்சுறுத்தி வருகிறது

India tour of Southafrica BCCI Plan to shortern the series

இதற்காக பல ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்காவுடனான விமான சேவையை நிறுத்தியுள்ளன. தென்னாப்பிரிக்காவுக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு கடும் விதி நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நெதர்லாந்து அணி தொடரை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஊர் திரும்பியது.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடரை ஒத்திவைக்க பி.சி.சி.ஐ. முடிவு எடுத்துள்ளது.இதனால் அதிர்ச்சி அடைந்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தலால் தங்களது நிதி நிலைமை மோசம் அடைந்துள்ளதாகவும், இந்தியா தொடர் மூலம் தான் வருமானம் ஈட்ட முடியும் என்பதால் முடிவை பரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுகொண்டது.

இந்திய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கடுமையான பயோ பபுள் முறை மற்றும் விமானத்தில் செல்லாமல் தரை வழியிலேயே மற்ற மைதானங்களுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்வதாக தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட பி.சி.சி.ஐ, 3 டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு பதிலாக 2 டெஸ்ட் போட்டிகளை மட்டும் விளையாடலாம் என யோசனை தெரிவித்துள்ளது.

இதற்கு தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம், நீங்க வந்தா மட்டும் போதும் என்ற அளவிற்கு இறங்கி வந்துள்ளது. எனினும் ஒம்மைக்கரான் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால் இந்திய வீரர்கள் சிலர் தென்னாப்பிரிக்கா செல்ல அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் , இந்த தொடர் குறித்து வரும் 48 மணி நேரத்தில் பி.சி.சி.ஐ. முடிவு எடுக்க உள்ளது

Story first published: Wednesday, December 1, 2021, 13:37 [IST]
Other articles published on Dec 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+