ஹர்திக் - ஷிகர் தவான் இடையே கடும் போட்டி... இலங்கை சுற்றுப்பயணத்தில் குழப்பம்.. காரணம் என்ன?
மும்பை: இந்திய அணியை தலைமை தாங்குவதில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிகர் தவானுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய அணி வரும் ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

இலங்கை டூர்
இந்திய அணி வரும் ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து டெஸ்டில் இருப்பார்கள் என்பதால் இலங்கை தொடரில் இந்திய B அணி பங்கேற்கவுள்ளது.

ஸ்ரேயாஸ்
இந்த அணிக்கு கேப்டனாக செயல்பட ஸ்ரேயாஸ் ஐயர் தான் முதல் தேர்வாக உள்ளார். ஆனால் அவருக்கு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இதுபோன்ற அறுவைசிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைய 4 மாதங்கள் ஆகும் எனக்கூறப்படுகிறது. எனவே இலங்கை தொடருக்கு முன்னதாக அவர் குணமடைவதற்கு வாய்ப்புகள் குறைவு.

குழப்பம்
இந்நிலையில் இவருக்கு அடுத்ததாக ஷிகர் தவான் மற்றும் ஹர்திக்கிற்கு அந்த வாய்ப்பு செல்லவுள்ளது. ஷிகர் தவான், நடந்த முடிந்த ஐபிஎல் தொடரில் அற்புதமான ஃபார்மில் இருந்தார். அதே போல இந்திய அணியிலும் சீனியர் ப்ளேயர் ஆவார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணியின் விருப்பமான தொடக்க வீரராக உள்ளார்.

ஹர்திக் பாண்டியா
மறுபுறம் இளம் அணியை வழிநடத்த இளம் வீரர் ஹர்திக் பாண்டியா ஒரு தேர்வாக உள்ளார். இவர் சமீப காலமாக பந்துவீசாததால் இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு பெறவில்லை. ஆனால் பேட்டிங்கில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். இவருக்கு கேப்டனாக கூடுதல் பொறுப்பு கொடுத்தால் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே இலங்கை தொடர் கேப்டனாக அனுபவ வீரர் ஷிகர் தவானா அல்லது ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவார்களா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications