Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு திரும்பிய சிஎஸ்கே வீரர்.. விராட் கோலி, ராகுலுக்கு இடமில்லை..தமிழக வீரருக்கு வாய்ப்பு

மும்பை: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரில் கேஎல் ராகுல், விராட் கோலி விளையாடுவார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இவ்விருவரும் இடம்பெறவில்லை.

இதே போன்று நடுவரிசையில் இளம் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடக்க வீரர்கள்

தொடக்க வீரர்கள்

15 பேர் கொண்ட இந்திய அணியில் ஷிகர் தவான் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜோடியாக வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலக்கிய சுப்மான் கில்லும் இடம்பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இஷான் கிஷன், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

ராகுல் திரிபாதிக்கு இடம்

ராகுல் திரிபாதிக்கு இடம்

யாருமே எதிர்பாராத வகையில், ஐபிஎல் தொடரில் கலக்கிய ராகுல் திரிபாதி ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் தீபக் ஹூடாவுக்கு மீண்டும் நடுவரிசையில் வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. தமிழக வீரர் ஆல்ரவுண்டர் வாசிங்டன் சுந்தர் , இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குல்தீப் யாதவ்

குல்தீப் யாதவ்

சஞ்சு சாம்சனுக்கு முதல் முறையாக தொடர்ந்து 3 தொடரில் விளையாட வாய்ப்பு வாங்கப்பட்டு இருக்கிறது. ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் ஜிம்பாப்வே தொடரிலும் இடம்பெற்று இருக்கிறார். சாஹல், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே தொடருக்கு குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

இதே போன்று சிஎஸ்கே வீரர் தீபக் சாஹர் 6 மாத காயத்திற்கு மீண்டும் தற்போது இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி, 2வது போட்டி 20 ஆம் தேதியும், கடைசி போட்டி 23 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

இந்திய அணி

இந்திய அணி

1, ஷிகர் தவான், 2, ருத்துராஜ், 3, சுப்மான் கில், 4, தீபக் ஹூடா, 5, ராகுல் திரிபாதி, 6, இஷான் கிஷன், 7,சஞ்சு சாம்சன், 8, வாசிங்டன் சுந்தர், 9, ஷர்துல் தாக்கூர். 10, அக்சர் பட்டேல், 11, குல்தீப் யாதவ், 12, முகமது சிராஜ், 13, ஆவேஷ் கான், 14, பிரசித் கிருஷ்ணா, 15, தீபக் சாஹர்

Story first published: Sunday, July 31, 2022, 10:31 [IST]
Other articles published on Jul 31, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+