இந்திய கிரிக்கெட் அணியின் தென்னாப்பிரிக்கா பயணம் அதிகாரப்பூர்வமாக உறுதி

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட் மற்ற்ம் 7 ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்கா தன்னிச்சையாக இந்திய அணியுடனான போட்டிகளை அறிவித்தது.
இதற்கு இந்தியத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று இருநாட்டு கிரிக்கெட் சங்கங்கள் கூட்டாக இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா பயணத்தை அறிவித்துள்ளன. அத்துடன் போட்டிகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணி விளையாட உள்ளது. வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா செல்லக் கூடும். போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.
Story first published: Tuesday, October 22, 2013, 14:26 [IST]
Other articles published on Oct 22, 2013


Click it and Unblock the Notifications