இந்திய 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு.. காயத்தால் மலிங்கா, ஹீரத் விலகல்
கொழும்பு: இந்திய அணியில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ள இலங்கை டி20 அணி வீரர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
3 டி20 போட்டிகளில் ஆடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இந்தியா வருகிறது. பிப்ரவரி 9ம் தேதி முதல் டி20 போட்டி புனேயில் நடைபெறுகிறது.

இதையடுத்து 15 பேர் கொண்ட அணியை இலங்கை கிரிக்கெட் தேர்வு வாரியம் இன்று தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கமான கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான லசித் மலிங்கா காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதில் தினேஷ் சண்டிமால் கேப்டனாக இருப்பார்.
திலகரத்னே தில்ஷன், பிரசன்னா, மிலின்டா ஸ்ரீவர்தனா, தனுஷ்கா குணதிலகா, திசாரா பெரேரா, தசுன் சனாகா, அசேலா குனரத்னே, சமர கபுகெதரா, சமீரா துஷ்மந்தா, தில்ஷரா பெர்ணான்டோ, ரஜிதா, பினுரா பெர்ணான்டோ, சசித்ரா சேனநாயகே. ஆகியோர் அணிக்காக தேர்வான வீரர்களாகும்.
அனுபவ வீரர்கள் குலசேகரா, ரங்கனா ஹீரத் ஆகியோர் காயத்தால் இந்த தொடரில் ஆட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications