Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

100 ரன்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்.. இந்திய அணி அபாரம்.. புரட்டி போட்ட சுழற்பந்துவீச்சு

அமெரிக்கா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Recommended Video

IND vs WI 5th T20 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி *Cricket

இந்திய அணி ஏற்கனவே மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில் கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் பிஷ்னாய் , ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன்,இஷான் கிஷன் உள்ளிட்டோர் களமிறங்கினர்.

ஸ்ரேயாஸ் அபாரம்

ஸ்ரேயாஸ் அபாரம்

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன் 11 ரன்களில் ஆட்டமழக்க, கடந்த சில போட்டிகளில் தடுமாறிய ஸ்ரேயாஸ் ஐயர் இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.40 பந்துகளை எதிர்கொண்ட அவர் 64 ரன்கள் விளாசினார்.இதில் எட்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இளம் வீரர் தீபக் ஹூடா, 25 பந்துகள் எதிர்கொண்டு 38 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.

189 ரன்கள் இலக்கு

189 ரன்கள் இலக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 15 ரன்கள் வெளியேற கேப்டன் ஹர்திக் பாண்டியா 16 பந்துகளில் எதிர்கொண்டு 28 ரன்கள் விளாசினார் . இதில் இரண்டு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 12 ரன்கள் சேர்க்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது . தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட் ஆக, புருக்ஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிவோன் தாமஸ் 10 ரன்களிலும், கேப்டன் பூரான் 3 ரன்களிலும், ரோமன் போவேல் 9 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

5 பேர் டக் அவுட்

5 பேர் டக் அவுட்

சிம்ரன் ஹெட்மயர் மட்டும் தனி ஆளாக நின்று போராடி அரை சதம் கடந்தார்.மற்ற வீரர்கள் இந்திய பந்துவீச்சாளர்களின் மாயாஜால சுழற்பந்தில் சிக்கி பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஐந்து பேர் தக்க அவுட் ஆக, அந்த அணி 15.4 வது ஓவரில் 100 ரன்களில் சுருண்டது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பிஸ்னாய் 4 விக்கெட்கள் கைப்பற்ற, அச்சர்பட்டேல், குல்திப் யாதவ் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி 4க்கு1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Story first published: Wednesday, August 10, 2022, 16:50 [IST]
Other articles published on Aug 10, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+