Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1992ல் இருந்து பட்டாசு வெடிக்க முடியாமல் திணறும் பாக். ரசிகர்: உலகக் கோப்பை ஸ்பெஷல் விளம்பரம்

டெல்லி: இளம் பாகிஸ்தான் ரசிகர் 1992ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு முறையும் இந்தியா-பாகிஸ்தான் விளையாடும்போது தனது நாட்டு அணி வெற்றி பெற்றால் வெடிக்க வைத்துள்ள பட்டாசுகள் அப்படியே அட்டைப்பெட்டிக்குள் இருக்கும் விளம்பரம் பிரபலம் ஆகியுள்ளது.

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 6 முறை மோதியுள்ளன. 6 முறையும் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் புகைப்படங்கள், கருத்துகளை இந்திய மக்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த சூழலில் ஒரு விளம்பரம் மிகவும் பிரபலமாகியுள்ளது.

1992

1992

ஒரு இளம் பாகிஸ்தானியர் 1992ம் ஆண்டு ஒரு அட்டைப்பெட்டி நிறைய பட்டாசுகள் வாங்கி வைத்துக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியை தனது தந்தையுடன் பார்க்கிறார். பாகிஸ்தான் வெல்லப்போவது போன்று தெரிந்தும் பட்டாசுகளை வெடிக்க அந்த அட்டைப்பெட்டியுடன் கிளம்புகையில் பாகிஸ்தான் தோற்றுவிடுகிறது. இதனால் கவலை அடைந்த அவர் அந்த அட்டைப்பெட்டியை கொண்டு போய் பத்திரமாக வைத்துவிடுகிறார்.

1996

1996

1996ம் ஆண்டிலும் இந்தியா-பாகிஸ்தான் விளையாடுகையில் பட்டாசுகளை வெடிக்கச் செல்லும்போது பாகிஸ்தான் அணி தோற்றுவிடுகிறது. மறுபடியம் அட்டைப்பெட்டி பத்திரமாக வைக்கப்படுகிறது.

1999

1999

1999ம் ஆண்டு பட்டாசுகளுடன் அந்த வாலிபர் தனது கர்ப்பிணி மனைவியுடன் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போட்டியை பார்க்கிறார். அப்போதும் பாகிஸ்தான் தோல்வி அடைய அட்டைப்பெட்டி பத்திரப்படுத்தப்படுகிறது.

2003

2003

2003ம் ஆண்டில் அவர் தனது மகனுடன் போட்டியை பார்க்கிறார். சிறுவன் ராக்கெட்டை கையில் வைத்து விளையாடுகையில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைகிறது. இதையடுத்து அந்த நபர் மகனின் கையில் இருந்த ராக்கெட்டை பிடுங்கி பிய்த்து எரிந்துவிட்டு பட்டாசுகள் உள்ள அட்டைப்பெட்டியை பத்திரப்படுத்துகிறார்.

2011

2011

2011ம் ஆண்டில் அந்த நபரின் மகன் பட்டாசுப் பெட்டியை தனது மடியில் வைத்துக் கொண்டு போட்டியை பார்க்கிறார். இம்முறையும் பாகிஸ்தான் தோல்வி அடைகிறது. இதனால் தந்தையோடு சேர்ந்து சிறுவனும் கவலை அடைகிறார். இறுதியில் பட்டாசுப்பெட்டியில் சிலந்தி வலை கட்டிவிடுகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனலில் இந்த விளம்பரம் அடிக்கடி ஒளிப்பரப்பானது.

Story first published: Monday, February 16, 2015, 11:41 [IST]
Other articles published on Feb 16, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+