Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 உலககோப்பையில் கலக்கிய இந்திய விக்கெட் கீப்பர்.. இன்னும் 2 நாட்களில் பிளஸ் 2 தேர்வு.. தந்தை கண்டிப்பு

மும்பை: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியா ஆறாவது முறையாக வென்றுள்ள நிலையில், நட்சத்திர விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் அபிமன்யு குண்டு, தற்போது தனது 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வுகளை எதிர்கொள்ள நவி மும்பைக்கு திரும்புகிறார். கிரிக்கெட் வெற்றி கொண்டாட்டத்தையும், தேர்வுப் படிப்பையும் அவர் சரிசெய்ய வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிராக 80 ரன்கள் எடுத்த அவர், தொடரில் 59.75 சராசரியில் 239 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார். அபிமன்யுவின் தந்தை அபிஷேக், ஆனந்தபஜார்.காம்-க்கு அளித்த பேட்டியில், மகனின் உலகக் கோப்பை வெற்றிக்கு அதிக கொண்டாட்டங்களுக்கு நேரம் இருக்காது எனத் தெரிவித்தார்.

ஏனெனில், பிப்ரவரி 10ஆம் தேதி முதல் அவருக்கு 12ஆம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. “வீடு வந்ததும் உடனடியாக படிக்க அமர வேண்டும்,” என்று அபிமன்யுவின் எதிர்காலம் குறித்த தனது எதிர்பார்ப்பைப் பகிர்ந்துகொண்டார்.

அபிமன்யு இடம்பெற்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, உலகக் கோப்பையை ஆறாவது முறையாக வென்றது. வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை திரும்புவார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். விமான விவரங்கள் தெரியவில்லை; நான் இன்னும் அலுவலகத்திலிருந்து திரும்பக்கூட இல்லை,” என்று தந்தை அபிஷேக் கூறினார்.

சிறுவயதில் நவி மும்பையின் வாஷியில் சுறுசுறுப்புடன் ஓடியாடி விளையாடிய அபிமன்யுவின் ஆற்றலைக் கண்ட பள்ளி ஆசிரியர்கள், அதை விளையாட்டில் பயன்படுத்த அறிவுறுத்தினர். இதையடுத்து, சேத்தன் ஜாதவ் கிரிக்கெட் அகாடமியில் அவர் சேர்க்கப்பட்டார். வீட்டுக்குச் செல்லும் முன் சேத்தன் சாரின் பயிற்சி மையத்திற்குச் செல்ல விரும்புவதாகவும், அல்லது சேத்தன் சார் தங்கள் வீட்டிற்கே வரலாம் என்றும் அபிஷேக் குறிப்பிட்டார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் பயிற்சியைத் தொடங்கிய சேத்தன் ஜாதவ், ஒரு இந்திய கிரிக்கெட் வீரரை உருவாக்குவதையே இலக்காகக் கொண்டிருந்தார். நவி மும்பையில் பல மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தும், அவர்களில் பலர் பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் கிரிக்கெட்டை பாதியிலேயே கைவிட்டனர்.

இது குறித்து பேசிய பயிற்சியாளர் ஜாதவ் , “நவி மும்பையில் மட்டும், 44 பொறியாளர்கள் மற்றும் சுமார் ஐந்து மருத்துவர்கள் ஒரு காலத்தில் எனது அகாடமியில் விளையாடியவர்கள். யாராவது வந்து கிரிக்கெட் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் மிகவும் விரும்பினேன்,” என்று தனது ஏக்கத்தைப் பகிர்ந்துகொண்டார்.

Story first published: Saturday, February 7, 2026, 7:00 [IST]
Other articles published on Feb 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+