Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 உலககோப்பை: ரோகித், ஹர்மன்பிரீத் பாராம்பரியத்தை முன்எடுத்து செல்வோம்.. இன்னும் பல கோப்பை வெல்வோம்- ஆயுஷ் மாத்ரே

மும்பை: அண்டர் 19 உலககோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது. இதில், வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சிறப்புமிக்க 175 ரன்கள் குவித்ததால், இந்தியா பிரம்மாண்டமான 411/9 ரன்களைக் குவித்து இங்கிலாந்துக்கு 412 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது.

போட்டியில் இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற மகாத்ரே, ஐசிசி ஆண்கள் அண்டர்-19 உலகக் கோப்பையை வென்ற ஆறாவது இந்திய கேப்டன் ஆனார். டி20 உலகக் கோப்பை வென்ற ரோஹித் ஷர்மாவையும், மகளிர் உலக கோப்பை வென்ற ஹர்மன்பிரீத் கவுர் வெற்றி தங்களுக்கு உத்வேகம் அளித்ததாக ஆயுஷ் மாத்ரே தெரிவித்தார்.

இது குறித்து பரிசளிப்பு விழாவில் பேசிய ஆயுஷ் மகாத்ரே, "நாங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்பினோம். ரோஹித் ஷர்மா உலகக் கோப்பையை வென்றார், ஹர்மன்பிரீத் அவர்களும் வென்றார், தற்போது நாங்களும் வென்றிருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

"எனது உணர்வுகளை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. ஆனால் இது எங்களுக்கு ஒரு மறக்க முடியாத இரவு. வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். நாங்கள் அமைத்த இலக்குகளை அவர்கள் மிகச் சரியாகச் செயல்படுத்தினர். அவர்கள் தங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்று அவர் கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் வெற்றிக்கு காரணமாக இருந்த வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான ஆட்டம் குறித்து கேட்டபோது, "அவரது இன்னிங்ஸுக்கு வார்த்தைகளே இல்லை. அவர் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன் என்பது எங்களுக்குத் தெரியும், இந்தப் போட்டியில் அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் காட்டினார்" என்று மகாத்ரே பெருமையுடன் கூறினார்.

இந்திய அணி பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் குழுவினரின் பங்களிப்பை பாராட்டிய அவர், "உதவியாளர்கள் குழுவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்கள் கடந்த பல மாதங்களாக எவ்வளவு கடுமையாக உழைத்தார்கள் என்பது வெளிப்பட்டது. இதுபோல எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளியுங்கள், நாங்கள் உங்களுக்குத் தொடர்ந்து கோப்பைகளை வென்று தருவோம்." என்று தெரிவித்தார்.

வைபவ் சூர்யவன்ஷி வெறும் 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து, அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றில் சிறந்த ஆட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தினார்.சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்தினார். அவர் 15 பவுண்டரிகள் மற்றும் 15 சிக்ஸர்கள் விளாசி, ஒரு போட்டியில் அதிவேக 150 ரன்கள் மற்றும் ஒரு அண்டர்-19 உலகக் கோப்பை இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் எடுத்த சாதனையையும் படைத்தார். கேப்டன் ஆயுஷ் மகாத்ரே 53 ரன்களுடனும், அபிக்ஞான் குண்டு 40 ரன்களுடனும் அவருக்கு ஆதரவளித்தனர். இதனால் இந்தியா 400 ரன்கள் எல்லையை எட்டியது.

இலக்கைத் துரத்தத் தொடங்கிய இங்கிலாந்து, ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. 142/2 என்ற வலுவான நிலையிலிருந்து 177/7 என சரிந்து, இந்தியாவை உறுதியான கட்டுப்பாட்டில் வைத்தது.காலேப் பால்கனர் அதிரடியான இன்னிங்ஸில் 67 பந்துகளில் 115 ரன்கள் குவித்து, இங்கிலாந்தின் நம்பிக்கையை ஏற்படுத்தினார்.

இந்திய பந்துவீச்சாளர்கள் நடு ஓவர்களில் அழுத்தத்தைத் தொடர்ந்தனர். ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி தாக்குதலை வழிநடத்தினார். தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் முக்கிய விக்கெட்டுகளை எடுத்தனர். கேப்டன் மகாத்ரே எடுத்த டாகின்ஸின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனால் இங்கிலாந்து அணி இறுதியில் 40.2 ஓவர்களில் 311 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

Story first published: Friday, February 6, 2026, 22:09 [IST]
Other articles published on Feb 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+