Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிடம் வசமாக வாங்கிய வங்கதேசம்.. ஜூனியர் உலக கோப்பை அரையிறுதிக்கு தகுதி!

கேப்டவுன்: தற்போது நியூசிலாந்தில் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்திய ஏ அணி உலகிலேயே மிகவும் சிறந்த அணியாக உருவெடுத்து இருக்கிறது.

சரியாக சொல்ல வேண்டும் என்றால் தற்போது இருக்கும் இந்தியன் ஏ அணியை விட இந்த ஜூனியர் அணி மரண விளையாட்டு விளையாடிக் கொண்டு இருக்கிறது. முக்கியமாக சுப்மான் கில் என்ற வீரர் எல்லா நாட்டு பவுலர்களையும் வைத்து செய்து கொண்டு இருக்கிறார்.

இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வி அடையவில்லை. அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

வங்கதேசம் தோல்வி

வங்கதேசம் தோல்வி

நேற்று கால் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்தியா 10 விக்கெட்டை இழந்து 265 ரன்கள் எடுத்தது. அதற்கு அடுத்து ஆடிய வங்கதேசம் 42.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 134 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் 131 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வெற்றிபெற்றது.

வெற்றி வெற்றி

வெற்றி வெற்றி

எந்த அணியும் தங்கள் விளையாடிய நான்கு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. இதில் இரண்டு போட்டிகளில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளது. இந்த தொடரில் வரிசையாக நான்கு போட்டியில் இந்தியா வெற்றி பெற்று இருக்கிறது.

கெத்தான சுப்மான் கில்

கெத்தான சுப்மான் கில்

இந்த போட்டியில் சுப்மான் கில் மிகவும் சிறப்பாக ஆடினார். 9 பவுண்டரி அடித்து மொத்தம் 86 ரன்கள் எடுத்தார். சென்ற போட்டியில் இவர் வெறும் 59 பந்துகளில் 90 ரன் அடித்தார். இந்த தொடரையே அவர் டி-20 தொடர் என நினைத்துக் கொண்டு ஆடி வருகிறார்.

தகுதி

தகுதி

இந்தியாதான் முதல் முதலில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணியாகும். அரையிறுதியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அதேபோல் இன்னொரு அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

சாம்பியன்

சாம்பியன்

இந்திய அணி அண்டர் 19 உலகக் கோப்பை போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்று இருக்கிறது. இப்போது ஆடும் ஆட்டத்தை பார்க்கையில் இந்தியா கண்டிப்பாக நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் என்று கண்ணை முடிக்கொண்டு இருக்கிறார்.

Story first published: Friday, January 26, 2018, 12:29 [IST]
Other articles published on Jan 26, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+