Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிராவிட் மகன் சமித் இந்திய U19 அணியிலிருந்து அதிரடி நீக்கம்.. காரணம் என்ன? சோகமான ரசிகர்கள்

பெங்களூர் : இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் மகனான சமிப்ராவிட் இந்திய அண்டர் 19 அணியில் இடம் பெற்றிருந்த நிலையில் அவர் அதனடியாக நீக்கப்பட்டிருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சினிமாவில் ஒரு பிரபல நடிகர் இருந்தால், அவரது மகன் அல்லது இயக்குனரின் மகன் திரையில் நடிக்க வருவார்கள்.

அதை போல் கிரிக்கெட்டிலும் தங்களது மகன் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என பெரிய ஜாம்பவான் வீரர்கள் நினைத்து இருக்கிறார்கள். கவாஸ்கர் பையனான ரோகன் கவாஸ்கர் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

u19 cricket samit dravid india u19 u19


ஆனால் தந்தையை போல் அவர் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. இதை போன்று சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், தற்போது இந்திய அணியில் சாதிக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பெற்று இருக்கிறார்.

இந்த சூழலில் இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராகுல் டிராவிட் மகனான சமீத் டிராவிட் உள்ளூர் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வந்தார். இதனால் அண்டர் 19 ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சமித் டிராவிட் இடம்பெற்றார். எனினும் அடுத்த அண்டர் 19 உலக கோப்பை தொடர் விளையாடும்போது சமித் டிராவிட்டுக்கு 20 வயது ஆகிவிடும் என்பதால் அவரால் உலகக் கோப்பையில் விளையாட முடியாத
சூழல் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அண்டர் 19 தொடரிலாவது சமித் டிராவிட் அறிமுகவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் மற்றும் இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் சமீத் டிராவிட் பிளேயிங் லெவனில் இல்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு தான் தெரிந்தது சமித் டிராவிட் இந்திய 19 அணியில் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் மாற்றப்பட்டு ரோகித் ராஜாவாத் என்ற வீரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதனால் சமித் டிராவிட் ஏன் அணியிலிருந்து நீக்கப்பட்டார்? இதன் பின்னால் ஏதேனும் அரசியல் இருக்கிறதா என்று ரசிகர்கள் குழம்பி உள்ளனர். எனினும் அண்மையில் நடைபெற்ற மகாராஜா டி20 தொடரில் சமித் டிராவிட் பெரிய அளவில் சாதிக்கவில்லை. கடைசியாக அவர் விளையாடிய ஏழு இன்னிங்ஸில் அதிகபட்சமாக அவர் 33 ரன்கள் தான் அடித்து இருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சமித் டிராவிட் பந்து வீசவும் தெரியும். ஆனால் மகாராஜா தொடரில் அவர் பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்பட்டதா அதனால்தான் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார் என்று குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. எனினும் இது குறித்து பிசிசிஐ எந்த ஒரு விளக்கத்தையும் தெரிவிக்கவில்லை.

Story first published: Tuesday, September 24, 2024, 8:31 [IST]
Other articles published on Sep 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+