Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

U19 உலககோப்பை இந்தியா வெல்ல முக்கிய காரணமே இவர் தான்! கம்பீருக்கு ஆபத்து..டிராவிட் வழியில் VVS Laxman

ஹராரே: 2026 ICC U19 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் ஆயுஷ் மகாத்ரே தலைமையில் கிடைத்த இந்த வெற்றி, இந்திய கிரிக்கெட்டின் ஆறாவது U19 உலகக் கோப்பை ஆகும். இதன் மூலம், அண்டர் 19 கிரிக்கெட்டில் முடி சூடா மன்னனாக இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

இறுதிப் போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி 175 ரன்கள் குவித்து, இந்தியா பிரமாண்டமான 411 ரன்களை எட்ட உதவினார். பின்னர், பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி, இளம் இங்கிலாந்து வீரர்களை 311 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது. இதன்மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

இங்கிலாந்தின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் இந்திய பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றினர். இறுதிப் போட்டியில், அம்பரீஷ் ஆர்.எஸ். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி, வெற்றியை உறுதிப்படுத்தினர்.அண்டர் 19 உலககோப்பையை வென்ற விராட் கோலி, முகமது கைஃப், உன்முக்த் சந்த், யாஷ் துல், பிருத்வி ஷா போன்ற வீரர்கள் பட்டியலில் ஆயுஷ் மாத்ரே இணைந்துள்ளார்.

இது குறித்து பேசிய இந்திய U19 அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹ்ரிஷிகேஷ் கனிட்கர், இளம் அணியினரின் செயல்பாட்டைப் பெரிதும் பாராட்டினார். "இது அற்புதமான உணர்வு. இந்தச் சிறுவர்களுக்கு இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கிலாந்து அணி ஒரு வலுவான போராட்டத்தை அளித்த பிறகு, இது ஒரு அருமையான ஆட்டம்," என்றார்.

"இது நாங்கள் வகிக்கும் முக்கியப் பணிகளில் ஒன்று. கோப்பைகள் முக்கியம் என்றாலும், திறமையான வீரர்கள் உருவாவதே எங்கள் முக்கிய குறிக்கோள். பிசிசிஐ தேசிய அகாடமியின் தலைமை தாங்கும் லக்ஷ்மண் என்னுடன் இங்கு இருக்கிறார். அவரும் இந்த வெற்றிக்கு ஒரு காரணம்' என்று அவர் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு அண்டர் 19 இந்திய அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டார். அப்போது, இந்திய அணி கோப்பையை வென்றது. அதன் பிறகு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் வர அந்த வெற்றி முக்கிய காரணமாக இருந்தது. தற்போது லட்சுமண், இந்திய U19 அணியின் பயிற்சியாளராக இல்லை என்றாலும், ஒரு வழிகாட்டியாக அணியுடன் செயல்பட்டார்.

இதனால், டிராவிட் போல் லட்சுமணும் இந்திய அணியை விரைவில் வழிநடத்தலாம். ஏற்கனவே கம்பீர் தலைமையில் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட்டில் மோசமாக விளையாடி வரும் நிலையில், அடுத்த பயிற்சியாளராக லட்சுமண் வர ரூட் கிளேயராக மாறிவிட்டது. இந்த சூழலில், கம்பீர் தனது பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்றால், டி20 உலககோப்பையை கண்டிப்பாக வெல்ல வேண்டும்.

Story first published: Friday, February 6, 2026, 23:18 [IST]
Other articles published on Feb 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+