For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

2வது டெஸ்டிலும் வெற்றி.. மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா

ஹைதராபாத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றுள்ளது.

Recommended Video

மே.இந்திய தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்டிலும் வெற்றி பெற்றது இந்தியா- வீடியோ

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவிற்கு கிரிக்கெட் தொடர் விளையாட வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மேற்கிந்திய தீவுகளை எளிதாக இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் முடிவடைந்துள்ளது. ஹைதராபாத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக வென்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட்டிங்

மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட்டிங்

இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்கு 311 ரன்கள் எடுத்தது. ரோஸ்டன் சேஸ் 106 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 6 விக்கெட் எடுத்தார். குல்தீப் 3 விக்கெட் எடுத்தார்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கு 367 ரன்கள் எடுத்தது. ரிஷாத் பண்ட் 92 ரன்கள் எடுத்தார். ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட் எடுத்தார்.

2வது இன்னிங்ஸ்

2வது இன்னிங்ஸ்

மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்தது. சுனில் அம்பரீஷ் 38 ரன்கள் எடுத்தார். உமேஷ் யாதவ் 4 விக்கெட் எடுத்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இதையடுத்து 74 ரன்கள் இலக்குடன் ஆடிய இந்தியா எளிதாக வென்றது. கேஎல் ராகுல் 33 மற்றும் பிரித்வி ஷா 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தனர். இதனால் 2 டெஸ்ட் தொடர் கொண்ட போட்டியில் இந்தியா 2-0 என்று தொடரை கைப்பற்றியது.

Story first published: Sunday, October 14, 2018, 17:41 [IST]
Other articles published on Oct 14, 2018
English summary
India vanishes Windes test series with another victory.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+