For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AFG பிளேயிங் 11 - விலகிய கோலி.. விக்கெட் கீப்பர் இடத்துக்கு கடும் போட்டி.. ரோஹித் அதிரடி

மும்பை : இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் பிளேயிங் 11 குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரோஹித் சர்மா, விராட் கோலி ஓராண்டுக்கு பின் டி20 அணிக்கு திரும்பி இருக்கும் நிலையில் அவர்கள் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. விராட் கோலி முதல் டி20யில் மட்டும் ஆட முடியாது என அணி நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார். எனவே, அவர் இல்லாமல் தான் இந்திய அணி முதல் டி20 போட்டியில் ஆட உள்ளது.

ரோஹித் சர்மா வந்து விட்டதால் அவர் துவக்க வீரராக ஜெய்ஸ்வாலுடன் களமிறங்குவார். விராட் கோலி களமிறங்கும் மூன்றாம் வரிசையில் சுப்மன் கில் முதல் டி20யில் மட்டும் ஆட உள்ளார். சூர்யகுமார் யாதவ் காயத்தில் சிக்கி ஓய்வில் இருக்கும் நிலையில், அவர் களமிறங்கும் நான்காம் வரிசையில் திலக் வர்மா பேட்டிங் செய்ய உள்ளார்.

India vs Afghanistan 1st T20 Playing 11 : Virat Kohli misses out, Sanju Samson may find his place

அடுத்து ஐந்தாம் இடத்தில் அதிரடி மன்னன் ரிங்கு சிங் பேட்டிங் செய்ய இருக்கிறார். ஆறாம் இடத்தில் விக்கெட் கீப்பர் ஒருவர் களமிறங்க வேண்டும் என்ற நிலையில், கடந்த ஆஸ்திரேலிய டி20 தொடர் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட ஜிதேஷ் சர்மாவை களமிறக்குவதா அல்லது நீண்ட காலம் கழித்து டி20 அணிக்கு திரும்பி இருக்கும் சஞ்சு சாம்சனை தேர்வு செய்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

கேப்டன் ரோஹித் சர்மா சஞ்சு சாம்சனை களமிறக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் நீண்ட அனுபவம் கொண்ட சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டி ரோஹித் முடிவு எடுக்கலாம். எனினும், இது டாஸ் போடும் தான் உறுதி ஆகும்.

வேகப் பந்துவீச்சில் ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் இடம் பெறுவார்கள். சுழற் பந்துவீச்சில் அக்சர் பட்டேல் பேட்டிங் திறனும் கொண்டவர் என்பதால் உறுதியாக ஆடுவார். மற்றொரு சுழற் பந்துவீச்சாளர் இடத்துக்கு குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் இடையே போட்டி எழுந்துள்ளது. ரோஹித் சர்மா, குல்தீப் யாதவுக்கே அணியில் இடமளிப்பார் என கூறப்படுகிறது. இந்த முடிவும் டாஸ் போடும் தான் உறுதி ஆகும்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20யில் களமிறங்க உள்ள 11 வீரர்கள் கொண்ட இந்திய அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் / ஜிதேஷ் சர்மா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் / ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்

Story first published: Thursday, January 11, 2024, 8:02 [IST]
Other articles published on Jan 11, 2024
English summary
India vs Afghanistan 1st T20 Playing 11 : Virat Kohli misses out, Sanju Samson may find his place
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+