Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் தொடர்.. டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ

மும்பை: 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் அதாவது புதிய சண்டிகரில் அமைந்துள்ள மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்தத் தொடரின் ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் மற்றும் டி20 போட்டிகள் இங்கு ஏற்கனவே நடைபெற்றிருந்தாலும், இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவிருப்பது இதுவே முதல்முறையாகும். இந்த டெஸ்ட் போட்டி ஜூன் 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மே 31ஆம் தேதி ஐபிஎல் தொடர் நிறைவடைந்த சில நாட்களிலேயே இந்தத் தொடர் தொடங்குகிறது.

India vs Afghanistan 2026 Schedule announced by BCCI Maiden Test at New Mullanpur Stadium

ஒருநாள் தொடர் விவரம்

டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. ஜூன் 14ஆம் தேதி தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி நடக்கிறது. பின்னர் ஜூன் 17ஆம் தேதி லக்னோவில் இரண்டாவது போட்டியும், தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூன் 20ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளன. இந்த ஒருநாள் போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டின் நினைவுகள்

இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் கடைசியாக 2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் மோதின. அந்தப் போட்டிதான் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் அவர்கள் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியாகும். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் விராட் கோலிக்குப் பதிலாக அஜிங்க்யா ரஹானே இந்திய அணியை வழிநடத்தினார். இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக விராட் கோலி அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. அதற்காக அவர் மீது அப்போது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அந்தப் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கமே முழுமையாக இருந்தது. ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோரின் சதத்தால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எடுத்தது. பின்னர் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகச் செயல்பட்டு ஆஃப்கானிஸ்தான் அணியை 109 மற்றும் 103 ரன்களுக்குச் சுருட்டினர். இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

திறமையை நிரூபிக்க வாய்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் குறுகிய காலத்திலேயே ஆஃப்கானிஸ்தான் அணி குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. குறிப்பாக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல முன்னணி அணிகளுக்கே அவர்கள் சவால் அளித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் 2026 டி20 உலகக் கோப்பையில் அவர்கள் லீக் சுற்றோடு வெளியேறினாலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரண்டு சூப்பர் ஓவர்கள் வரை சென்று வெற்றிக்கு மிக அருகில் வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.

இருப்பினும், அவர்கள் தொடர்ந்து அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சற்று சறுக்குகின்றனர். இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் சந்தித்த தோல்விக்குப் பிறகு, தங்களது ஆட்டம் எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, புதிய சண்டிகரில் நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் போட்டி ஆஃப்கானிஸ்தானுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

இந்தியா - ஆஃப்கானிஸ்தான் தொடர் முழு அட்டவணை:

ஜூன் 6 முதல் 10 வரை: ஒரேயொரு டெஸ்ட் போட்டி (புதிய சண்டிகர்)
ஜூன் 14: முதல் ஒருநாள் போட்டி (தர்மசாலா)
ஜூன் 17: இரண்டாவது ஒருநாள் போட்டி (லக்னோ)
ஜூன் 20: மூன்றாவது ஒருநாள் போட்டி (சென்னை)

Story first published: Monday, March 2, 2026, 17:02 [IST]
Other articles published on Mar 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+