Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா - ஆப்கானிஸ்தான் ஆசிய விளையாட்டு போட்டி மழையால் ரத்தானால் இந்தியாவுக்கு செம லக்.. விதி என்ன?

நிஷின்: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் மோதும் காலிறுதி ஆட்டம் மழையால் முழுமையாக ரத்தானால், ஐசிசி தரவரிசை அடிப்படையில் இந்திய அணிக்கு சாதகமான முடிவு அறிவிக்கப்படும். அது குறித்த ஆசிய விளையாட்டு விதிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

ஜப்பானின் நிஷின் நகரில் உள்ள கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் மைதானத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) காலை 10:00 மணிக்கு இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் 2வது காலிறுதி ஆட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு திங்கட்கிழமை வானிலை மிகவும் மோசமாக இருக்கும் என்றும், மழை பெய்வதற்கு 97 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. காலை 8:00 மணி முதலே 70 சதவீதத்திற்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆட்டம் தொடங்குவதிலும் முழுமையாக நடைபெறுவதிலும் பெரும் சிக்கல் எழுந்துள்ளது.

India vs Afghanistan Asian Games 2026 Quarterfinal Rain Rules and ICC Ranking Advantage

விதிமுறை சொல்வது என்ன?

ஆசிய விளையாட்டுப் போட்டி கிரிக்கெட் விதிமுறைகளின்படி, நாக்-அவுட் ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டால், சர்வதேச டி20 தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணியே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தற்போதைய ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய அணி உலகளவில் 1வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 10வது இடத்தில் இருக்கிறது. இதனால் ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்தானாலும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி எந்தவித சிரமமும் இன்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

இதேபோல் நடைபெற உள்ள மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் (6வது இடம்) மற்றும் ஹாங்காங் (24வது இடம்) அணிகள் மோதுகின்றன. அந்தப் போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு செல்லும்.

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT-யில் பார்ப்பது? நாக் அவுட் விதி என்ன?

IND vs AFG ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியை எந்த சேனல், OTT-யில் பார்ப்பது? நாக் அவுட் விதி என்ன?

2023 ஆசிய விளையாட்டுப் போட்டி சம்பவம்

கடந்த 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இதே போன்ற ஒரு சுவாரசிய சம்பவம் அரங்கேறியது. இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்ட போது, சிறந்த தரவரிசை அடிப்படையில் இந்திய அணிக்கு ஆசிய விளையாட்டில் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, September 28, 2026, 6:05 [IST]
Other articles published on Sep 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+