Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG பிளேயிங் 11: கோலி, பாண்டியா இல்லை.. 3வது இடத்தில் யார்? எந்த ஆல் ரவுண்டருக்கு வாய்ப்பு?

தர்மசாலா: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை, ஜூன் 13) தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. விராட் கோலி இல்லாத நிலையில், அவரது இடத்திற்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக இந்திய அணி இத்தொடரில் இருந்து தனது பரிசோதனைகளைத் தொடங்க உள்ளது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இழந்ததால், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி இன்று களமிறங்குகிறது.

India Vs Afghanistan Rohit Sharma leading team India in 2026 ODI series

கோலிக்கு மாற்று இஷான் கிஷனா, ஜெய்ஸ்வாலா? காயம் காரணமாக நட்சத்திர வீரர் விராட் கோலி இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும், இன்றைய ஆடும் லெவனில் இஷான் கிஷனுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது. ஜெய்ஸ்வால் இதுவரை தொடக்க வீரராக மட்டுமே விளையாடியுள்ளதால், 3வது இடத்திற்கு இஷான் கிஷன் பொருத்தமானவராக இருப்பார் எனக் கருதப்படுகிறது. இதனால் ஜெய்ஸ்வால் பெஞ்சில் அமர வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

காயத்தால் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக இளம் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அர்ஷ்தீப் சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார்கள். சுழற்பந்து வீச்சில் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம் பெறுவர். ஹர்ஷ் துபேவும் இன்று அறிமுகமாக வாய்ப்புள்ளது.

IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு

IND vs AFG: இந்திய அணி பிளேயிங் லெவனில் அறிமுகமாகும் 29 வயது வீரர்.. ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இந்திய உத்தேச அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷ் துபே, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா.

ஆப்கானிஸ்தான் உத்தேச அணி: ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராகிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), அஸ்மதுல்லா உமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கேயாலியா கரோட்டி, ஏஎம் கசான்பர், பிலால் சாமி, ஃபரீத் அகமது.

Story first published: Saturday, June 13, 2026, 9:36 [IST]
Other articles published on Jun 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+