Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG ODI அறிவிப்பு.. ஜடேஜா, சிராஜ், ஜெய்ஸ்வால் அதிரடி நீக்கம்.. 3 புதுமுகங்களுக்கு வாய்ப்பு

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. இளம் வீரர் சுப்மன் கில் இந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதிரடி மாற்றங்கள் நிறைந்த இந்த அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதே சமயம், 3 இளம் வீரர்களுக்கு முதன்முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

2026 ஐபிஎல் தொடர் முடிந்த ஒரு வாரத்தில் இந்தத் தொடர் தொடங்க உள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அணியில் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர். ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமை காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரது உடல் தகுதியைப் பொறுத்தே அவர்கள் களமிறங்குவது உறுதி செய்யப்படும் என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா தெரிவித்துள்ளார்.

India vs Afghanistan ODI Series Rishabh Pant Jadeja Siraj Dropped 3 New Faces Included

அதிரடி நீக்கம் மற்றும் வருகை

கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய அணியிலிருந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ள நிலையில், இஷான் கிஷன் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும், ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் ஒருநாள் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளனர்.

3 புதுமுகங்கள்

2027-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரை முன்னிட்டு, இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கத் தேர்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பிரின்ஸ் யாதவ், பஞ்சாப் வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் ப்ரார் மற்றும் விதர்பா அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்ஷ் துபே ஆகிய 3 பேருக்கு முதன்முறையாக இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார், ஹர்ஷ் துபே.

போட்டி அட்டவணை:

ஜூன் 14 - முதலாவது ஒருநாள் போட்டி (தர்மசாலா)
ஜூன் 17 - இரண்டாவது ஒருநாள் போட்டி (லக்னோ)
ஜூன் 20 - மூன்றாவது ஒருநாள் போட்டி (சென்னை)

IND vs AFG டெஸ்ட் அணி அறிவிப்பு.. பண்ட்டுக்கு ஆப்பு.. ராகுலுக்கு ஜாக்பாட்.. பும்ராவுக்கு ஓய்வு

IND vs AFG டெஸ்ட் அணி அறிவிப்பு.. பண்ட்டுக்கு ஆப்பு.. ராகுலுக்கு ஜாக்பாட்.. பும்ராவுக்கு ஓய்வு

அனைத்துப் போட்டிகளும் மதியம் 1:30 மணிக்குத் தொடங்க உள்ளன. முன்னதாக ஜூன் 6 முதல் 10 வரை சண்டிகரில் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இஷான் கிஷனின் வருகையும், ரிஷப் பண்ட் நீக்கமும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Story first published: Tuesday, May 19, 2026, 18:13 [IST]
Other articles published on May 19, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+