IND vs AFG : டி20 வரலாற்றிலேயே மிகப்பெரும் உலக சாதனை.. ரோஹித் சர்மா மைல்கல் ரெக்கார்டு
மும்பை : ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா மிகப் பெரும் உலக சாதனையை படைக்க இருக்கிறார். இதுவரை அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் சர்மா முதல் இடத்தில் இருக்கிறார். அதில் மேலும் ஒரு மைல்கல் சாதனை படைக்க இருக்கிறார்.
ரோஹித் சர்மா கடந்த 2௦௦7ஆம் ஆண்டு முதல் சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வருகிறார். 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் ரோஹித் சர்மாவும் ஆடினார். அப்போது மிடில் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தார் ரோஹித். அப்போது முதல் சுமார் 18 ஆண்டுகளாக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி வரும் ரோஹித், இதுவரை 149 டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

அடுத்து நடக்க உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி அவரது 150வது சர்வதேச டி20 போட்டி ஆகும். இது மிகப் பெரிய மைல்கல் சாதனை ஆகும். உலக அளவில் 150 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற இருக்கிறார்.
இந்த பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் ரோஹித் சர்மா (149 போட்டிகள்), அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங் (134 போட்டிகள்), டாக்ரேல் (128 போட்டிகள்), பாகிஸ்தான் அணியின் சோயப் மாலிக் (124 போட்டிகள்), நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் (122 போட்டிகள்) ஆகியோர் உள்ளனர்.
இந்திய அணியின் விராட் கோலி 11வது இடத்தில் இருக்கிறார். அவர் 115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கிறார். அவருக்கு அடுத்து ஹர்திக் பாண்டியா 92 போட்டிகளில் ஆடி 30வது இடத்தில் இருக்கிறார். அடுத்து நடக்க உள்ள 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இவர்கள் மூவரும் பங்கேற்பார்கள் என்பதால் அவர்களின் டி20 போட்டி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications