Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 வரலாற்றிலேயே மாபெரும் சாதனை படைத்த ரோஹித் சர்மா.. உலக அளவில் மெகா மைல்கல் ரெக்கார்டு

மொஹாலி : இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்று இமாலய சாதனை படைத்துள்ளார். உலக அளவில் இந்த மைல்கல் சாதனையை செய்யும் முதல் வீரர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், ரோஹித் சர்மா ஒரு வீரராக தன் நூறாவது சர்வதேச டி20 போட்டி வெற்றியை சந்தித்தார். இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 158 ரன்கள் குவித்தது. அடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதில் துரதிர்ஷ்டவசமாக ரோஹித் சர்மா டக் அவுட் ஆகி இருந்தார்.

India vs Afghanistan T20 : Rohit Sharma becomes first player to get 100 T20I wins

ஆனாலும், கேப்டனாக 40வது சர்வதேச டி20 வெற்றியை பெற்றுத் தந்தார் ரோஹித். மேலும், அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர்கள் வரிசையிலும் ரோஹித் தற்போது முதல் இடத்தில் இருக்கிறார். இந்த ஆப்கானிஸ்தான் போட்டி அவரது 149வது சர்வதேச டி20 போட்டி. ரோஹித் சர்மா பங்கேற்ற 149 டி20 போட்டிகளில் இந்திய அணி 100 வெற்றிகளை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க சாதனை ஆகும்.

அதிக டி20 வெற்றிகள் பெற்ற வீரர்கள் வரிசையில் ரோஹித்துக்கு அடுத்து இருக்கும் வீரர்கள் -

சோயப் மாலிக் (பாகிஸ்தான்) - 86 வெற்றிகள்
விராட் கோலி (இந்தியா) - 73 வெற்றிகள்
முகமது ஹபீஸ் (பாகிஸ்தான்) - 70 வெற்றிகள்
முகமது நபி (ஆப்கானிஸ்தான்) - 70 வெற்றிகள்
மார்டின் கப்தில் (நியூசிலாந்து) - 68 வெற்றிகள்
பாபர் அசாம் (பாகிஸ்தான்) - 66 வெற்றிகள்

Story first published: Thursday, January 11, 2024, 23:39 [IST]
Other articles published on Jan 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+