Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AFG: இது இந்திய டெஸ்ட் அணியா இல்லை குஜராத் டைட்டன்ஸ் அணியா? 6 பேருக்கு வாய்ப்பு தந்த கில்!

சண்டிகர்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணியில், கேப்டன் சுப்மன் கில்லின் ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் வீரர்கள் அதிகளவில் இடம் பெற்று இருப்பது கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தையும் 'சார்பு' (பேவரிடிசம் - favouritism) குற்றச்சாட்டுகளையும் எழுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்தப் போட்டிக்கான இந்திய அணியின் 11 பேர் கொண்ட அணி - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

India vs Afghanistan Test Six Gujarat Titans players in Playing 11 Shubman Gill Faces Favoritism Claims

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கியுள்ள 11 வீரர்கள் கொண்ட இந்திய விளையாடும் லெவனில், கேப்டன் சுப்மன் கில் உட்பட சாய் சுதர்சன், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் அறிமுக வீரர் மானவ் சுதார் என மொத்தம் 6 வீரர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சொந்த ஐபிஎல் அணி வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் அணியில் முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது கடுமையான விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

புறக்கணிக்கப்பட்ட சீனியர் வீரர்கள்

இந்த அணித் தேர்வு குறித்து எழும் முக்கிய விமர்சனம் என்னவென்றால், சமீபத்திய உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அக்சர் படேல் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியிலேயே சேர்க்கப்படவில்லை. அதேபோல், உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணியில் இடம்பிடித்த தேவ்தத் படிக்கல் போன்ற திறமையான பேட்ஸ்மேனுக்கு விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்படாமல் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டுள்ளார். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் தன்னை நிரூபிக்காத சாய் சுதர்சன் மற்றும் அறிமுக வீரர் மானவ் சுதாருக்கு உடனடியாக விளையாடும் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சாதகமாகவும் சிலர் கருத்து கூறி இருக்கின்றனர்.

டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஐந்து நாள் தாக்குப்பிடித்து ஆடும் திறன் மற்றும் பொறுமையைப் பொறுத்தது. ஆனால், கடந்த மே 31 அன்று தான் ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி முடிவடைந்தது. டி20 போட்டிகளில் இருந்து உடனடியாக டெஸ்ட் போட்டிக்கு மாறும் சூழலில், ஐபிஎல் ஆட்டத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து டெஸ்ட் விளையாடும் லெவன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாய் சுதர்சன் சொதப்பினால் 'வீட்டுக்குத் தான்' போகணும்.. IND vs AFG டெஸ்ட் போட்டிதான் கடைசி வாய்ப்பு

சாய் சுதர்சன் சொதப்பினால் 'வீட்டுக்குத் தான்' போகணும்.. IND vs AFG டெஸ்ட் போட்டிதான் கடைசி வாய்ப்பு

இந்திய டெஸ்ட் அணியின் எதிர்காலக் கட்டமைப்பைக் காட்டிலும், கேப்டன் கில் தனக்கு நெருக்கமான குஜராத் டைட்டன்ஸ் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகளை வாரி வழங்கியுள்ளார் என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மற்றும் பந்துவீச்சு எவ்வாறு செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்தே இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதில் கிடைக்கும். சாய் சுதர்சன் மற்றும் மானவ் சுதார் போன்ற குஜராத் வீரர்கள் இப்போட்டியில் சொதப்பினால், கேப்டன் கில் மீதான இந்த குற்றச்சாட்டு இன்னும் தீவிரமடையும் என்பதில் சந்தேகமில்லை.

Story first published: Saturday, June 6, 2026, 10:55 [IST]
Other articles published on Jun 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+