Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS - செம ட்விஸ்ட் இசான் கிஷனுக்கு புதிய பொறுப்பு.. உலக கோப்பைக்கான ஆடிசனை நடத்தும் டிராவிட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஒன்றை ராகுல் டிராவிட் வைத்துள்ளார். மொஹாலியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பிளேயிங் லெவனின் யாருமே எதிர்பார்க்காத வகையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் .மேலும் அவர் தொடக்க வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

India vs aus- Reason for Ishan kishan is to play in middle order

இது ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனென்றால் ரோகித் சர்மா இல்லாத போது தொடக்க வீரராக தான் களமிறங்குவார். ஆனால் அவருக்கு நடுவரிசையில் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என பேட்டிங் வரிசையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ராகுல் டிராவிட் இஷான் கிஷனுக்கு புதிய பொறுப்பு ஒன்றை கொடுத்திருக்கிறார் என தெரியவந்துள்ளது.

அதன்படி உலகக்கோப்பை தொடரில் தற்போது பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு தான் ஆடிஷன் நடைபெறுகிறது. இதில் அனுபவ வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவாரா இல்லை இடது கை பேட்ஸ்மேன் இசான் கிஷன் விளையாடப் போகிறாரா என்று தெரியவில்லை. இந்த நிலையில் இஷான் கிசனை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரராக களம் இறக்கி விட்டால் அவர் நடுவரிசையில் எப்படி விளையாடுவார் என்பது தெரியாமல் போய்விடும்.

இதன் காரணமாக இஷான் கிசனுக்கு நீ நடுவரிசையில் விளையாடி பழகிக் கொள் என்று டிராவிட் அனுமதி வழங்கி விட்டார். தற்போது டிராவிட்டின் இந்த முடிவு ஸ்ரேயாஸுக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ஸ்கோரை அடிக்கவில்லை என்றால் உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனில் நிச்சயம் இசான் கிஷனுக்கு தான் நடுவரிசையில் வாய்ப்பு வழங்கப்படும் என்பது உறுதியாகி விடும். டிராவிட்டின் இந்த முடிவு மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவும் பார்க்கப்படுகிறது. காரணம் இஷான் கிசன் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் அவர் நடுவரிசையில் இருப்பது இந்தியாவின் பேட்டிங்கிற்கு கூடுதல் சாதகமாக கருதப்படும்.

Story first published: Friday, September 22, 2023, 15:27 [IST]
Other articles published on Sep 22, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+