For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆஸி. முதல் ஒருநாள் போட்டியில் ஜடேஜா, விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு.. காரணம் இவர் தான்!

ஹைதராபாத் : ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் ஷங்கர் அணியில் இடம் பிடித்தனர்.

இவர்கள் இருவரும் உலகக்கோப்பை அணிக்கான பந்தயத்தில் இடம் பெறாமல் தான் இருந்தார்கள். ஆனால், ஹர்திக் பண்டியாவின் காயம், இவர்கள் இருவருக்கும் வாய்ப்புக்கான கதவுகளை திறந்து விட்டுள்ளது.

ஜடேஜா நிலை

ஜடேஜா நிலை

ஜடேஜா ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பி விட்டார் என நினைத்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஜடேஜாவுக்கு வாய்ப்பு

ஜடேஜாவுக்கு வாய்ப்பு

ஜடேஜா, நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு பெறவில்லை. மேலும், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடருக்கு முதலில் தேர்வாகவில்லை. இந்த நிலையில், ஹர்திக் பண்டியா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதால், மாற்று வீரராக ஜடேஜா அணியில் இடம் பிடித்தார்.

களமிறங்கிய விஜய் ஷங்கர்

களமிறங்கிய விஜய் ஷங்கர்

அதே போல, மித வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் விஜய் ஷங்கர் ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றாலும், அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியா இருப்பதால் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், பண்டியாவின் ஓய்வு காரணமாக முதல் போட்டியில் களமிறங்கினார்.

பண்டியாவால் வாய்ப்பு

பண்டியாவால் வாய்ப்பு

உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்குமா என தெரியாத இரண்டு ஆல்-ரவுண்டர் வீரர்களுக்கு தங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் ஹர்திக் பண்டியா. தற்போது காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர், ஆஸ்திரேலிய தொடர் முழுவதும் ஆடமாட்டார் என கூறப்பட்டு வருகிறது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜடேஜா மற்றும் விஜய் தங்கள் திறமையை நிரூபித்து உலகக்கோப்பை அணியில் தங்கள் வாய்ப்பை பெற வேண்டும். ஐபிஎல் தொடரின் செயல்பாடுகள் உலகக்கோப்பை அணித் தேர்வில் எடுபடாது என கேப்டன் கோலி கூறி இருக்கும் நிலையில், ஆஸ்திரேலிய தொடர் தான் இவர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு.

Story first published: Saturday, March 2, 2019, 17:12 [IST]
Other articles published on Mar 2, 2019
English summary
India vs Australia 1st ODI : Jadeja and Vijay Shankar got chance as Hardik Pandya in rest
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+