For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நம்ம பும்ராவா இப்படி பௌலிங் போட்டாரு? நம்பவே முடியலையே! ஆஸி. போட்டியில் பும்ரா ஏமாற்றம்!

ஹைதராபாத் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நீண்ட காலம் கழித்து பும்ரா தன் மோசமான பந்துவீச்சை பதிவு செய்தார்.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக துவக்கினார். முதல் ஓவரில் 1 ரன் கொடுத்த அவர், ஒரு விக்கெட்டையும் எடுத்து அசத்தினார்.

மாக்ஸ்வெல், கவாஜா அதிரடி

மாக்ஸ்வெல், கவாஜா அதிரடி

எனினும், அடுத்து வந்த ஓவர்களில் சில முறை அதிக ரன்கள் கொடுத்தார். பும்ரா பந்தில் பவுண்டரி அடிப்பது சிரமம் என்ற பேச்சை அடித்து நொறுக்கினர் ஆஸ்திரேலிய வீரர்கள் மாக்ஸ்வெல் மற்றும் கவாஜா.

அதிக ரன்கள் கொடுத்தார்

அதிக ரன்கள் கொடுத்தார்

பும்ரா தன் பந்துவீச்சில் 11 ஃபோர் கொடுத்து இருந்தார். இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய பும்ரா, 60 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். கடந்த 29 ஒருநாள் போட்டிகளில் இது தான் அதிக ரன்கள் கொடுத்த பும்ராவின் பந்துவீச்சு.

ஐந்தாவது இடம்

ஐந்தாவது இடம்

மேலும், இது பும்ராவின் மோசமான பந்துவீச்சுகளில் ஐந்தாவது இடம் பிடித்துள்ளது. மற்ற பந்துவீச்சாளர்கள் 60 ரன்கள் கொடுத்திருந்தால், இந்த ஏமாற்றம் நமக்கு ஏற்பட்டு இருக்காது. ஆனால், பும்ரா மீது அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் ஓவருக்கு ஆறு ரன் கொடுத்ததே பெரிய ஏமாற்றமாக உள்ளது.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

இந்த போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் தோனி, ஜாதவ் அரைசதம் அடித்து, கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெறச் செய்தனர்.

Story first published: Monday, March 4, 2019, 17:56 [IST]
Other articles published on Mar 4, 2019
English summary
India vs Australia 1st ODI : Jasprit Bumrah’s expensive bowling after Champions Trophy final 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X