For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

Ind vs Aus 1st ODI: அசைக்க முடியாத தோனி, ஜாதவ்.. அசத்தல் பேட்டிங்.. இந்தியா அபார வெற்றி!

ஹைதராபாத் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 0-2 என தோல்வி அடைந்த நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

பலமான இந்திய அணி

பலமான இந்திய அணி

உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி முழு பலத்துடன் களம் இறங்கியது. டி20 தொடர் போல பரிசோதனை முயற்சிகள் இன்றி இந்திய அணி சமநிலை கொண்ட அணியை தேர்வு செய்தது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி - ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மாக்ஸ்வெல், ஆஷ்டன் டர்னர், அலெக்ஸ் கேரி, ஆடம் சாம்பா, பாட் கம்மின்ஸ், ஜேசன் பெஹ்ரண்டாப், நாதன் கோல்டர்-நைல்.

ஆஸ்திரேலியா பேட்டிங்

ஆஸ்திரேலியா பேட்டிங்

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ரன் ஏதும் அடிக்காமல் பும்ராவின் பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். உஸ்மான் கவாஜா 50, ஸ்டாய்னிஸ் 37, ஹேண்ட்ஸ்கோம்ப் 19, மாக்ஸ்வெல் 40, டர்னர் 21, அலெக்ஸ் கேரி 36, கோல்டர் நைல் 28 ரன்கள் எடுக்க அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 236 ரன்களுக்கு 7 விக்கெட்கள் இழந்து தன் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது.

இந்திய பந்துவீச்சு எப்படி?

இந்திய பந்துவீச்சு எப்படி?

இந்திய அணியில் ஷமி, பும்ரா, குல்தீப் தலா 2 விக்கெட்களும், ஜாதவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ரா ஓவருக்கு 6 ரன்கள் வழங்கி ஏமாற்றம் அளித்தார். விஜய் ஷங்கர் கிடைத்த வாய்ப்பில் கோட்டை விட்டு, 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்தார்.

இந்திய அணி சேஸிங்

இந்திய அணி சேஸிங்

அடுத்து 237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு துவக்க வீரர் தவான், ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து கோலி 44, ரோஹித் 37, அம்பதி ராயுடு 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து தவித்தது.

கேதார் ஜாதவ் - தோனி இணை

கேதார் ஜாதவ் - தோனி இணை

அப்போது இணை சேர்ந்த தோனி, ஜாதவ் ஐந்தாவது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தோனி 59, கேதார் ஜாதவ் 81 ரன்கள் சேர்த்தனர். இவர்களை பிரிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி போராடி தோல்வி அடைந்தது. 48.2 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Story first published: Saturday, March 2, 2019, 21:49 [IST]
Other articles published on Mar 2, 2019
English summary
India vs Australia 1st ODI Live score update. Both the teams looking for a winning note before world cup 2019.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+