Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆரம்பத்துல நல்லாத்தான் இருந்துச்சு.. ஆனா பினிஷிங் சரியில்லையேப்பா! விஜய் ஷங்கர் பரிதாபம்!

ஹைதராபாத் : விஜய் ஷங்கர் இந்திய அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறார்.

முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு பெற்ற அவர் பந்துவீச்சில் சரியாக செயல்படாமல் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டார்.

டி20 தொடரில் விஜய்

டி20 தொடரில் விஜய்

முன்னதாக, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்ற ஒரு போட்டியிலும் விஜய் ஷங்கர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அந்த போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்தாலும், அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

முதல் ஓவர்

முதல் ஓவர்

அடுத்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு பெற்ற விஜய், தான் வீசிய முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதனால், தொடர்ந்து பந்து வீச வாய்ப்பு பெற்றார்.

பந்துவீச்சு வாய்ப்பு மறுப்பு

பந்துவீச்சு வாய்ப்பு மறுப்பு

எனினும், இரண்டாவது ஓவரில் 7 ரன்கள், மூன்றாவது ஓவரில் 10 ரன்கள் என அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதன் பின் அவருக்கு பந்து வீசும் வாய்ப்பை கேப்டன் கோலி அளிக்கவில்லை. இது விஜய்க்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

முதல் போட்டி பந்துவீச்சு

முதல் போட்டி பந்துவீச்சு

முதல் ஒருநாள் போட்டியில் 3 ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் இன்றி தன் குறுகிய பந்துவீச்சை முடித்துக் கொண்டார் விஜய் ஷங்கர். மித வேகப் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் என பெயர் பெற்ற விஜய், இதுவரை தன் திறமையை பேட்டிங்கில் மட்டுமே காட்டியுள்ளார்.

கேள்விக் குறி

கேள்விக் குறி

பந்துவீச்சில் இதுவரை விஜய் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆஸ்திரேலிய தொடரில் அடுத்து உள்ள நான்கு ஒருநாள் போட்டிகளிலும், இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? அப்படி கிடைத்தாலும் அதில் பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிற்கும் வாய்ப்பு கிடைக்குமா? என பல கேள்விகள் இருப்பதால் அவரது உலகக்கோப்பை வாய்ப்பு இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.

Story first published: Saturday, March 2, 2019, 18:41 [IST]
Other articles published on Mar 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+