ஆஸி.க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? இந்திய அணியின் பிளேயிங் லெவன்?
மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்குகிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி ரன் குவிப்புக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது டெஸ்ட் தொடரில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் ஒருநாள் தொடரை வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடக்கூடிய ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.

தொடக்க ஜோடி
இதனால் இந்த தொடர் கடும் சவால்களை ரோஹித் சர்மாவுக்கு அளிக்கக்கூடும். இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ரோகித் சர்மாவும், சுப்மன் கில் தான் விளையாடுவார்கள். தற்போது கே எல் ராகுல் ஒரு நாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக செயல்படுவதால் இந்த ஜோடி தான் உலகக்கோப்பை தொடரில் விளையாடும்.

நடுவரிசை
இதேபோன்று மூன்றாவது இடத்தில் விராட் கோலி விளையாடுவார். நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக இடம்பெறாத நிலையில், அந்த இடம் சூரிய குமார் யாதவ்க்கு கிடைக்கும். இதேபோன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே எல் ராகுல் இடம் பெறுவார். ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மாதங்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பியுள்ள ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்தில் ஒரு நாள் அணியில் இடம் பெறுவார்.

பந்துவீச்சாளர்கள்
எட்டாவது இடத்திற்கு முகமது ஷமியும், ஒன்பதாவது இடத்திற்கு முகமது சிராஜும், பத்தாவது இடத்தில் உம்ரான் மாலிக் அல்லது ஷர்துல் தாக்கூர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று பதினொன்றாவது வீரராக இரண்டாவது சுழற் பந்துவீச்சாளருக்கான இடத்தில் சாகல் அல்லது குல்தீப் யாதவ் விளையாட அதிக வாய்ப்பு இருக்கிறது. ரன்குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் டாஸ் வென்று இந்திய அணி முதலில் பந்து வீசும் என எதிர்பார்க்கலாம்.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி, 9, முகமது சிராஜ், 10, உமரான் மாலிக்/ ஷர்துல் தாக்கூர், 11, சாஹல் / குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications