For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs AUS : ”அடேய் சூர்யகுமார்.. இன்றைக்கு மட்டும் எப்புட்றா பறக்கவிடுற” தெறிக்கும் மீம்ஸ் இதோ!

விசாகப்பட்டினம்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நடைபெற்ற சுவாரஸ்யங்களை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 42 பந்துகளில் 80 ரன்கள் விளாசிய ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார் சூர்யகுமார் யாதவ். இதனை வேதாளம் படத்தின் லட்சுமி மேனனிடம் அடிவாங்குவது போல் நடித்து அஜித் குமார் வில்லனை அடிப்பார். அப்போது வில்லன், நீ அடிக்கிறது கூட எனக்கு வலிக்கலை டா.. ஆனால் பயப்படுறது மாதிரி நடிக்கிற.. பார்த்தியா.. அதுதான்டா வலிக்கிது என்று கூறுவார். அதனை மாற்றி இந்திய ரசிகர்கள், ”டேய் உலகக்கோப்பைல தோற்றது கூட வலிக்கலைடா.. ஆனால் அன்று பைனலில் டெய்லண்டர்களுக்கு ஸ்ட்ரைக் கொடுத்து ஆடிட்டு, இன்று மேட்ச்-ல பொளக்குற பார்த்தியா.. இதுதான்டா வலிக்கிது” என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.

நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வீரர் ஜோஷ் இங்லிஸ் 47 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பெரியளவில் சோபிக்காத இங்லிஸ், டி20 கிரிக்கெட்டில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி டெம்ப்ளேட் வைத்து, ஒருநாள் உலகக்கோப்பையில் எல்லாம் ஆக்‌ஷன் பண்ணிட்டான் மேடம்.. இப்போ டி20 உலகக்கோப்பை வரப்போகுதுனு தெரிஞ்ச உடனே சும்மா சில்லு சில்லுனு நடக்குறான் மேடம் என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் அசத்தல்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனை அம்பி கதாபாத்திரத்தை அடித்து உதைத்த பின் திடீரென அந்நியன் வந்த அடியாட்களை வெளுத்து கட்டுவார். அப்போது அடியாட்கள் அந்நியன் வந்ததை அறியாமல் கிண்டல் செய்வார்கள். இதனை மாற்றி, ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை பார்த்து, மாமே.. இதோ பாரேன்.. உலகக்கோப்பை பைனலில் உண்டாவா வாங்குன அம்பி.. ஜிம்கினி நிக்கிறாரு என்று கிண்டல் செய்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் சோகம்.

நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் எந்த பந்தையும் சந்திக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனை வடசென்னை படத்தில் ராஜனை கொலை செய்ய முயற்சிக்கும் போது, திடீரென குணா கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனி, ”நீங்க என்ன வேணாலும் பண்ணுங்க.. என்னைய விட்ருங்க” என்று சொல்லுவார். அதனை அப்படியே மாற்றி ருதுராஜ் கெய்க்வாட் சொல்வது போல், நீங்க என்ன வேணா பண்ணுங்க.. என்னைய விட்ருங்க என்று கோபித்து கொள்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் ஜாலி ரகம்.

INDIA vs AUSTRALIA 1st T20: Fantastic Memes from Social Media after India won by 2 wickets against Australia at Visakhapatnam
INDIA vs AUSTRALIA 1st T20: Fantastic Memes from Social Media after India won by 2 wickets against Australia at Visakhapatnam
INDIA vs AUSTRALIA 1st T20: Fantastic Memes from Social Media after India won by 2 wickets against Australia at Visakhapatnam
Story first published: Friday, November 24, 2023, 11:27 [IST]
Other articles published on Nov 24, 2023
English summary
INDIA vs AUSTRALIA 1st T20: Fantastic Memes from Social Media after India won by 2 wickets against Australia at Visakhapatnam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+