For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா vs ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி.. எத்தனை மணிக்கு தொடக்கம்? என்ன சேனல், ஓடிடி?

மெல்போர்ன்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்தப் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும், எந்த மைதானத்தில் நடக்கும், எந்த சேனல் மற்றும் ஓடிடியில் நேரலையில் ரசிகர்களால் பார்க்க முடியும் என்பதை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதற்காக ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கின்றனர்.

India vs Australia 1st T20 Live Streaming

அண்மையில் ஆசியக் கோப்பைத் தொடரை இந்திய அணி வென்றிருந்த சூழலில், ஆஸ்திரேலியா அணியையும் டி20 கிரிக்கெட்டில் வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் முதல்முறையாக விளையாடும் அபிஷேக் சர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, திலக் வர்மா உள்ளிட்ட இளம் வீரர்களின் செயல்பாடுகள் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

2026 டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்ட சூழலில், இந்திய அணியை இறுதி செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அணியும் மிட்சல் மார்ஷ் தலைமையில் வலிமையாக இருக்கிறது. இந்த நிலையில் நாளை கான்பெராவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது.

இந்தப் போட்டி ஆஸ்திரேலியா நேரப்படி மாலையிலும், இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கும் தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி மதியம் 1.15 மணிக்கு போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் பந்து ஏற்கனவே கூறியதை போல் 1.45 மணிக்கு வீசப்படும். இந்தப் போட்டியை நேரலையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் காணலாம்.

அதேபோல் ஓடிடியில் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் பார்க்க முடியும். ஆஸ்திரேலியாவில் ஃபாக்ஸ் கிரிக்கெட் தொலைக்காட்சியில் நேரலையாக காண முடியும். சுமார் ஒரு மாத இடைவேளைக்கு பின் இந்திய அணி மீண்டும் டி20 கிரிக்கெட் பக்கம் திரும்ப உள்ளதால், நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Tuesday, October 28, 2025, 15:15 [IST]
Other articles published on Oct 28, 2025
English summary
India vs Australia 1st T20 Live Streaming: Timing, Venue, Team Details and Where to Watch the Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+