விசாகப்பட்டினம் : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு இந்த ஆட்டம் நடைபெறுகிறது.
இதில் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் வியாழன் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெறவில்லை. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பெறாததால் சூரியகுமார் யாதவ் தான் இந்திய அணி கேப்டனாக செயல்பட உள்ளார்.

இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக இசான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்க அதிக வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது வீரராக திலக் வர்மாவுக்கும் நான்காவது வீரராக கேப்டன் சூரியகுமார் யாதவும் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஐந்தாவது வீரராக அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே, ஆறாவது வீரராக ரிங்கு சிங் ஆகியோர் நாளைய போட்டியில் விளையாட வாய்ப்பு இருக்கிறது. நம்பர் ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலும் எட்டாவது இடத்தில் ரவி பிஸ்னாயும் விளையாட வாய்ப்புள்ளது. இதேபோன்று கடைசி மூன்று இடத்திற்கு வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் விளையாட கூடும். இல்லையென்றால் முகேஷ் குமாருக்கு பதில் விளையாட ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு இருக்கலாம்.
பேட்டிங் நீளமாக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் முடிவெடுத்தால் ரவி பிஸ்னாய்க்கு பதில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இதே போன்று அதிரடி வீர ஜெய்ஸ்வால் அணியில் இருக்கிறார். ஆனால் அவருக்கு ஓப்பனிங்கில் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை.
ருதுராஜ் ஐ பி எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறந்து விளங்கினாலும் இதுவரை சர்வதேச போட்டியில் தன்னுடைய திறமையை அவர் வெளிப்படுத்துவதில்லை.ஆனால் அவர்தான் அணியின் துணை கேப்டன் என்பதால் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார். இதன் காரணமாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்.
உத்தேச பிளேயிங் லெவன் : 1. இஷான் கிஷன், 2, ருதுராஜ் கெய்க்வாட், 3,திலக் வர்மா, 4, சூர்யகுமார் யாதவ், 5, ரிங்கு சிங், 6, சிவம் துபே, 7, அக்சர் பட்டேல், 8,ரவி பிஸ்னாய் / வாசிங்டன் சுந்தர், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, முகேஷ் குமார்/ ஆவேஷ் கான், 11, பிரசித் கிருஷ்ணா.