For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இனி மேல் தான் வெறித்தனமா விளையாடுவோம்.. சூரியன் மீண்டும் உதிக்கும்.. சூர்யகுமார் கருத்து - INDvsAUS T20

மும்பை : இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் வரும் வியாழக்கிழமை முதல் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிகளுக்கு இந்திய அணி தற்காலிக கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுகிறார்.

கடைசி இரண்டு டி20 போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக செயல்பட உள்ளார். உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு மூன்று நாட்கள் இடைவெளியில் மீண்டும் அடுத்த தொடருக்கு சூரியகுமார் யாதவ் தயாராகிவிட்டார்.

India vs australia 1st t20 - We will play fearless cricket says stand in captain suryakumar

இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளரிடம் பேசிய அவர் உலக கோப்பையில் நாங்கள் அடைந்த தோல்வி மிகவும் வலியை கொடுத்ததாகவும் அதிலிருந்து மீண்டு வர இன்னும் நாட்கள் தேவைப்படும் என்று சூரியகுமார் யாதவ் கூறினார். இது குறித்து பேசிக அவர், நம் தோல்விக்கு பிறகு அடுத்த நாள் எழுந்து அனைத்தையும் மறந்து விட முடியாது. அது மிகவும் கஷ்டம். ஏனென்றால் இது நீண்ட தொடராக நடந்தது.

இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெறவே விரும்பினோம். ஆனால் நாளையும் சூரியன் உதிக்கும். இருளுக்கு முடிவில் நிச்சயம் வெளிச்சம் வரும். நாம் அதில் சிக்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். டி20 போட்டியை பொருத்தவரை முற்றிலும் புதிய வீரர்கள் தான் களமிறங்குகிறார்கள். இதனால் இந்த சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பெருமைப்படும் அளவில்தான் செயல்பட்டோம்.

வீரர்கள் பலரும் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தினார்கள். நேர்மறையான கிரிக்கெட்டை நாங்கள் விளையாடினோம். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக வீரர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். உலகக்கோப்பை தொடரின் போது நாங்கள் வேறொரு ரோகித் சர்மாவை பார்த்தோம். அவர் என்ன பேசினாரோ அதை தான் செய்தார். அணி ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசினாரோ அதை தான் மைதானத்திலும் செய்தார்.

ரோகித் குறித்து நாங்கள் பெருமை கொள்கிறோம். உலகக்கோப்பையில் செய்ததை நாங்கள் டி20 கிரிக்கெட்டிலும் செய்வோம் என்று நம்புகிறேன். இன்று மதியம் தான் நான் வீரர்களை சந்தித்தேன். அவர்களிடம் பயமின்றி தைரியமாக விளையாடுங்கள் என்று கூறினேன். களத்திற்கு செல்லும் போது தனிப்பட்ட சாதனைகளை யோசிக்காமல் அணிக்காக விளையாடும் வீரராக நான் இருப்பேன்.

அதை தான் வீரர்களுக்கும் சொன்னேன். உங்களை விட அணி தான் முக்கியம் என்பதை நினையுங்கள் என்றேன். அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இதனால் இனிவரும் அனைத்து போட்டிகளும் மிகவும் முக்கியம். இஷான் கிஷன் எங்கள் அணியில் இருக்கிறார். அவர் நன்றாக செயல்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு டி20 தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று சூரிய குமார் யாதவ் கூறினார்.

Story first published: Wednesday, November 22, 2023, 23:28 [IST]
Other articles published on Nov 22, 2023
English summary
India vs australia 1st t20 - We will play fearless cricket says stand in captain suryakumar yadav இனி மேல் தான் வெறித்தனமா விளையாடுவோம்..சூரியன் மீண்டும் உதிக்கும்..சூர்யகுமார் கருத்து - INDvAUS T20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+