Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus 1st T20 : கடைசி பந்தில் வென்ற ஆஸி.. போராடி தோல்வி அடைந்த இந்தியா!

விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் டி20 போட்டி விசாகபட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. கடைசியாக நடந்த நியூசிலாந்து டி20 தொடருடன் ஒப்பிடுகையில் இந்திய அணியில் பல மாற்றங்கள் இருந்தன.

யாருக்கு வாய்ப்பு?

யாருக்கு வாய்ப்பு?

இந்திய அணியில் உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வட்டத்தில் இருக்கும் வீரர்கள் அனைவர்க்கும் அணியில் இடம் அளிக்கும் வகையில் ராகுல் மற்றும் உமேஷ் யாதவுக்கு அணியில் இடம் அளிக்கப்பட்டது. தவான், விஜய் ஷங்கருக்கு களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித், ராகுல், கோலி, ரிஷப் பண்ட், தோனி, தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா, உமேஷ் யாதவ், சாஹல், மாயங்க் மார்கண்டே, பும்ரா.

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி விவரம்

ஆஸ்திரேலிய அணி - ஆரோன் பின்ச், டிஆர்சி ஷார்ட், ஸ்டாய்னிஸ், மாக்ஸ்வெல், ஹேண்ட்ஸ்கோம்ப், டர்னர், கோல்டர் நைல், கம்மின்ஸ், ஜை ரிச்சர்ட்சன், சாம்பா, பெஹ்ரண்டாப்

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்திய அணிக்கு ராகுல், ரோஹித் சர்மா துவக்கம் அளித்தனர். ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கோலி 24, ரிஷப் பண்ட் 3, ராகுல் 50, தினேஷ் கார்த்திக் 1, க்ருனால் பண்டியா 1, உமேஷ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின் பாதியில் தோனி தனியாளாக போராடி 37 பந்துகளில் 29 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் இழந்து இருந்தது.

ஆஸி. சேஸிங்

ஆஸி. சேஸிங்

ஆஸ்திரேலிய அணி துவக்கத்தில் 2 விக்கெட் இழந்து தடுமாறினாலும், பின்னர் மாக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 56 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். துவக்க வீரர் ஷார்ட் 37 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், அந்த அணி வெற்றி இலக்கை நோக்கி எளிதாக நகர்ந்தது. கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் சொதப்பினார். ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Story first published: Sunday, February 24, 2019, 22:31 [IST]
Other articles published on Feb 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+