
பிட்ச் நிலைமை
இந்நிலையில் இந்த காரசாரமான மோதலுக்கான பிட்ச் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. நாக்பூர் மைதானத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் நடைபெறுகிறது. வழக்கமாக இங்கு பிட்ச்-ன் மைய பகுதியில் ஓரளவிற்கு புற்கள் இருக்கும். இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு முதலில் சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களும் ரன் அடித்துக்கொள்வார்கள். 3வது நாளில் இருந்து தான் ஸ்பின்னர்களின் அட்டாக் இருக்கும். அதுபோன்று தான் தற்போது தயார்படுத்தியிருந்தனர்.

திடீர் மாற்றம்
ஆனால் கடைசி நேரத்தில் மாற்றி வருகின்றனர். பிட்ச்-ஐ பார்வையிட்ட பயிற்சியாளர் ராகுல் டிராவிட், முதல் நாளில் இருந்தே ஸ்பின்னர்களின் கை ஓங்கி இருக்க வேண்டும், எனவே பிட்ச்-ன் மேற்புறத்தில் உள்ள புற்களை சுத்தமாக வெட்டி எடுக்கவும், நன்கு வரண்டு இருக்கும் படி மாற்றவும் கூறியுள்ளார். இதனையடுத்து அவசர அவசரமாக பிட்ச்-ன் தன்மையை மாற்றி வருகின்றனர்.

5 நாட்களும் நடக்குமா?
இதனால் வரவிருக்கும் இந்த போட்டி 5 நாட்கள் முழுவதுமாக நடக்குமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் மிக குறைந்த ஸ்கோர்களை தான் அடிக்க முடியும். நாட்கள் போக போக பந்து ஏகபோகத்திற்கு திரும்பும் என்பதால் டாஸ் வெல்லும் அணி உஷாராக பேட்டிங்கை தேர்வு செய்வது தான் நல்லது. அப்போது தான் டேர்ன் குறைவாக இருக்கும் போதே ஓரளவிற்கு ரன் சேர்த்துவிட முடியும்.

இயற்கை செய்யும் உதவி
பிட்ச்-ஐ தான் மாற்றுகிறார்கள் என்று பார்த்தால் இயற்கையும் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கிறது. போட்டி நடைபெறும் 5 நாட்களிலுமே அதிக வெப்பமாக தான் இருக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. அதாவது 36 டிகிரி செல்சியஸ் சராசரியாக வெயில் அடிக்கக்கூடும். இதனால் பிட்ச்-ல் அதிக வெடிப்புகள் உருவாகி, பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்கவே போராட்டம் நடத்தப்போவதை பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications