For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடுத்த ஆளு உள்ள வாங்க! லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பை வாரிக் கொடுக்கும் அம்பதி ராயுடு!!

நாக்பூர் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அம்பதி ராயுடு 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

முதல் ஒருநாள் போட்டியிலும் அம்பதி ராயுடு சரியாக ரன் குவிக்காத நிலையில், ரசிகர்கள் ராயுடுவை தூக்க வேண்டும் என இணையத்தில் குரல் எழுப்ப துவங்கி உள்ளனர்.

அம்பதி ராயுடு ஆட்டம்

அம்பதி ராயுடு ஆட்டம்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் மட்டுமே எடுத்த அம்பதி ராயுடு, இரண்டாம் போட்டியில் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். இரண்டு போட்டிகளில் மட்டுமே அம்பதி ராயுடு சரியாக ஆடவில்லை.

ரசிகர்கள் கோபம்

ரசிகர்கள் கோபம்

எனினும், ராயுடுவின் செயல்பாட்டில் திருப்தி இல்லாத ரசிகர்கள் சமீபத்தில் நடந்த டி20 தொடரில் சிறப்பாக ஆடிய ராகுலுக்கு வாய்ப்பு அளித்து அம்பதி ராயுடுவை அணியில் இருந்து நீக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

விஜய் ஷங்கர் ரன் குவிப்பு

விஜய் ஷங்கர் ரன் குவிப்பு

மேலும், இரண்டாம் போட்டியில் அம்பதி ராயுடு விரைவில் வெளியேறியதால் விஜய் ஷங்கர் அடுத்து பேட்டிங் ஆடும் வாய்ப்பை பெற்றார். அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி 41 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார் விஜய் ஷங்கர்.

இது சரியா?

இது சரியா?

ஆக மொத்தத்தில் அம்பதி ராயுடு வெறும் 2 போட்டிகளில் சரியாக ஆடாததால், அவரது இடத்தை ராகுலிடம் கொடுக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால், 2 போட்டிகளை மட்டுமே வைத்து ராயுடுவின் நிலையை முடிவு செய்வது சரியாக இருக்காது.

நியூசிலாந்து தொடர்

நியூசிலாந்து தொடர்

அம்பதி ராயுடு கடைசியாக ஆடிய நியூசிலாந்து தொடரில் 5 போட்டிகளில் 190 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அவர் எடுத்த ரன்கள் 13*, 47, 40*, 0, 90. நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக ரன் குவித்த அம்பதி ராயுடுவை அத்தனை எளிதில் அணியை விட்டு நீக்கி விட முடியாது.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை தொடர் நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள், நியூசிலாந்து ஆடுகளங்களை போலவே இருக்கும் என்பதால், அம்பதி ராயுடு நிச்சயம் உலகக்கோப்பை அணியில் இருப்பார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய தொடரில் ராயுடு மீண்டும் ஒரு முறை சொதப்பினால், தன் வாய்ப்பை பிறருக்கு வாரிக் கொடுக்க வேண்டிய நிலை தான் ஏற்படும்!

Story first published: Tuesday, March 5, 2019, 17:34 [IST]
Other articles published on Mar 5, 2019
English summary
India vs Australia 2nd ODI : Ambati Rayudu failed once again and opened way for KL Rahul
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+