Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன கேப்டன் இப்படி பண்ணீட்டீங்க? கோலியால் பரிதாபமாக அவுட்டான விஜய் ஷங்கர்!

Recommended Video

vijay shankar Run out: விஜய் சங்கரை எமனாக துரத்தும் ரன் அவுட் தொல்லை...பறிபோன நல்வாய்ப்பு

நாக்பூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலியால், விஜய் ஷங்கர் ரன் அவுட் ஆனார்.

கோலி - விஜய் ஷங்கர் இருவரும் நன்றாக பேட்டிங் செய்து வந்த நிலையில், இந்த ரன் அவுட் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

விஜய் ஷங்கர் - கோலி

விஜய் ஷங்கர் - கோலி

இந்திய அணி 75 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து தவித்த போது விஜய் ஷங்கர் - கோலி இணைந்து கூட்டணி அமைத்து ரன் சேர்த்தனர். இருவரும் 81 ரன்கள் சேர்த்த நிலையில், விஜய் ஷங்கர் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

அந்த ஸ்ட்ரைட் டிரைவ்

கோலி ஸ்ட்ரைட் டிரைவ் அடித்த போது அந்த பந்து நேராக எதிரில் இருந்த ஸ்டம்ப்பை நோக்கி வந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் சாம்பா பந்தை பிடிக்க முயன்றார். அப்போது அவரது கைவிரல் நுனி பந்தில் பட்டது.

பரிதாப ரன் அவுட்

பரிதாப ரன் அவுட்

இந்த நேரத்தில், கிரீஸ் கோட்டுக்கு சற்று வெளியே இருந்த விஜய் ஷங்கர், சுதாரித்து பேட்டை உள்ளே வைப்பதற்குள், பந்து ஸ்டம்ப்பை தகர்த்தது. இதனால் நன்றாக ஆடி வந்த விஜய் சங்கர் ரன் அவுட் ஆகி, ஆட்டமிழந்து சோகமாக வெளியேறினார்.

கோலியின் தவறா?

கோலியின் தவறா?

இதில் கோலியின் தவறு எதுவும் இல்லை என்றாலும், கோலி ஸ்ட்ரைட் டிரைவ் அடிக்கப் போய் தான் விஜய் ஷங்கர் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அருமையாக ஒற்றை ரன்களை ஓடி வந்த விஜய், அதற்காகவே எதிரில் நின்ற போது ஒரு அடி முன்னேறி நின்றார். ஆனால், அதுவே அவருக்கு வினையாக அமைந்து விட்டது.

இரண்டு முறை

இரண்டு முறை

இந்த போட்டியில் விஜய் 46 ரன்கள் அடித்தார். இதுவரை இரண்டு முறை மட்டுமே ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் ஆடும் வாய்ப்பு பெற்றுள்ள விஜய் ஷங்கர் இரண்டு முறையுமே ரன் அவுட் ஆகி ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

கவனத்தை ஈர்த்தார்

கவனத்தை ஈர்த்தார்

இந்த போட்டியில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை நான்கு ரன்களில் தவறவிட்டார் விஜய் ஷங்கர். எனினும், தன் இன்னிங்க்ஸில் 5 ஃபோர், 1 சிக்ஸ் என அடித்து, நல்ல ஸ்ட்ரைக் ரேட் கொண்டு, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Story first published: Tuesday, March 5, 2019, 21:02 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+