Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நம்புனா நம்புங்க!! கபில் தேவ், சச்சின் வரிசையில் இடம் பிடித்த ஜடேஜா!

நாக்பூர் : இந்திய அணியின் சுழற் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் ஜடேஜா முக்கியமான சாதனை ஒன்றை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் செய்தார்.

அந்த குறிப்பிட்ட சாதனை மூலம் ஜாம்பவான்களான கபில் தேவ், சச்சின் வரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

ஜடேஜா 21 ரன்கள்

ஜடேஜா 21 ரன்கள்

ஜடேஜா இரண்டாவது ஒருநாள் போட்டியில் 21 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 10 ரன்கள் அடித்த போது ஜடேஜா ஒருநாள் போட்டியில் 2000 ரன்களை கடந்தார். மொத்தமாக 2011 ரன்கள் எடுத்துள்ளார்.

ஜடேஜா மூன்றாவது இடம்

ஜடேஜா மூன்றாவது இடம்

இதன் மூலம் ஜடேஜா 150 விக்கெட்கள் மற்றும் 2000 ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் கபில் தேவ், சச்சின் டெண்டுல்கருடன் மூன்றாவதாக இடம் பிடித்தார்.

கபில் தேவ், சச்சின்

கபில் தேவ், சச்சின்

ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ் 3,782 ரன்களும், 253 விக்கெட்களும் எடுத்துள்ளார். சச்சின் 18,426 ரன்களும், 154 விக்கெட்களும் எடுத்துள்ளார். இவர்கள் வரிசையில் மூன்றாவது ஆல்-ரவுண்டராக இடம் பிடித்துள்ளார் ஜடேஜா.

171 விக்கெட்கள்

171 விக்கெட்கள்

ஜடேஜா பேட்ஸ்மேன் என அறியப்பட்டாலும், அதிக போட்டிகளில் அவர் பேட்டிங் செய்ததில்லை. அப்படி பேட்டிங் செய்த போட்டிகளிலும் பெரிய ரன்களை குவித்ததில்லை. அதே சமயம் பந்துவீச்சில் ஜடேஜா சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 171 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Tuesday, March 5, 2019, 21:26 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+