For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நாக்பூரில் தோனியை காலி செய்த விராட் கோலி! என்ன சாதனைன்னு சொல்லுங்க பார்ப்போம்?

நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, முன்னாள் கேப்டன் தோனியை குறிப்பிட்ட சாதனை ஒன்றில் முந்தியுள்ளார்.

நாக்பூரில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் தன் 40வது ஒருநாள் போட்டி சதம் அடித்தார் கோலி.

கோலி, விஜய் ஷங்கர் இருக்கட்டும்.. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா தான்! கோலி, விஜய் ஷங்கர் இருக்கட்டும்.. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணம் பும்ரா தான்!

கோலி அதிக ரன்கள்

கோலி அதிக ரன்கள்

இதன் மூலம், நாக்பூர் மைதானத்தில் அதிக ரன்கள் அடித்து இருந்த தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலி தற்போது நாக்பூர் மைதானத்தில் 5 இன்னிங்க்ஸ்களில் 268 ரன்கள் அடித்துள்ளார். இதன் சராசரி 81.25 ஆகும்.

அதிக சராசரி

அதிக சராசரி

தோனி 5 இன்னிங்க்ஸ்களில் 268 ரன்கள் அடித்துள்ளார். இதன் சராசரி 89.63 ஆகும். தோனி அதிக நாட்-அவுட்கள் மூலம், கோலியை விட அதிக சராசரி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு சதம்

இரண்டு சதம்

மேலும், நாக்பூர் மைதானத்தில் இரண்டு சதம் அடித்த வீரர்கள் தோனி மற்றும் கோலி மட்டுமே. கோலி தன் இரண்டாவது சதத்தை நேற்றைய போட்டியில் அடித்தார். கோலி 120 பந்துகளில் 116 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

தோனி அதிர்ச்சி

தோனி அதிர்ச்சி

அதே சமயம், தோனி ரன் ஏதும் எடுக்காமல் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். எனினும், முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. இறுதியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Wednesday, March 6, 2019, 17:59 [IST]
Other articles published on Mar 6, 2019
English summary
India vs Australia 2nd ODI Kohli beat Dhoni in this record
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X