Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs Aus 2nd ODI : விராட் கோலி சூப்பர் சதம்.. விஜய் சங்கர் வீசிய கடைசி ஓவரில் இந்தியா வெற்றி!

நாக்பூர் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோலி சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

அணி மாற்றம்

அணி மாற்றம்

இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முதல் போட்டியில் ஆடிய அதே அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியில் டர்னர், பெஹ்ரண்டாப் நீக்கப்பட்டு, நாதன் லியோன், ஷான் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி (கேப்டன்), அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, விஜய் ஷங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, பும்ரா.

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி விவரம்

ஆஸ்திரேலியா அணி - ஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மாக்ஸ்வெல், ஷான் மார்ஷ், அலெக்ஸ் கேரி, ஆடம் சாம்பா, பாட் கம்மின்ஸ், நாதன் லியோன், நாதன் கோல்டர்-நைல்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

டாஸில் வென்ற ஆஸி. அணி இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணிக்கு துவக்கம் அளித்த ரோஹித் சர்மா ரன் ஏதும் அடிக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். தவான் 21, அம்பதி ராயுடு 18 ரன்களில் ஆட்டமிழந்தனர். சிறப்பாக ஆடிய விஜய் ஷங்கர் 46 ரன்கள் அடித்து இருந்த நிலையில் ரன் அவுட் ஆகி ஏமாற்றம் அடைந்தார். அடுத்து சாம்பா வீசிய ஒரே ஓவரில் ஜாதவ் 11, தோனி 0 ரன்களுடன் வெளியேறினர். ஜடேஜா 21, குல்தீப் 3, ஷமி 2*, பும்ரா 0 என சொற்ப ரன்கள் எடுத்தனர்.

கோலி சதம் அடித்தார்

கோலி சதம் அடித்தார்

சிறப்பாக பேட்டிங் செய்த கேப்டன் கோலி தன் 40வது ஒருநாள் போட்டி சதம் கடந்து அணியை கரை சேர்த்தார். 48.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இந்திய அணி 250 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆஸ்திரேலியா சேஸிங்

ஆஸ்திரேலியா சேஸிங்

அடுத்து ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. அந்த அணி சிறப்பான துவக்கம் பெற்றது. எனினும், இடையே விக்கெட்களை இழக்கத் துவங்கியது. அந்த அணியில் ஆரோன் பின்ச் 37, கவாஜா 38, ஹேண்ட்ஸ்கோம்ப் 48, ஸ்டாய்னிஸ் 52 என ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

கடைசி ஓவர் வெற்றி

கடைசி ஓவர் வெற்றி

கடைசி ஓவரில் 2 விக்கெட்கள் கையில் இருக்க 11 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது ஆஸ்திரேலியா. அப்போது கேப்டன் கோலி, பந்தை விஜய் ஷங்கர் வசம் கொடுத்தார். விஜய் அருமையாக பந்து வீசி இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனால், இந்தியா 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Tuesday, March 5, 2019, 22:22 [IST]
Other articles published on Mar 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+